உங்களின் அலுவலக சூழலை பொறுத்தளவில் செயல்திறம்மிக்க, நேர்மையான வேலைகளுக்கே என்றும் முதலிடம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு சிறந்த வேலைகளை செய்ப்பவர்களுக்கு தொழில் சார்ந்த ரீதியிலும், வாழ்க்கை தரத்திலும் உயர்ந்த நிலையினை அடைவதற்கான சாத்திய நிலைகள் உறுதியாக கிடைக்கும் .
உங்களின் தொழில் எதுவாக இருந்தாலும் நேர்மையான, திறமைமிக்க செயல்பாடுகளுக்கு கண்டிப்பான வரவேற்புகள் உண்டு. அத்துடன் உங்களின் உற்சாகமான அணுகுமுறைகளையே உங்கள் வேலை இடத்தில் பெரும்பாலும் உங்கள் தொழில் தருனர்கள் விரும்புவது உண்டு. உங்களின் திறமையான வேலை என்பதுவும் உங்களின் உற்சாகமான தொழில் முறைகளை கொண்டு வரவேற்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அண்மையில் மிக்சிக்கன் மாகாண வணிகத்துறை கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி பணியாளர்கள் தமது தொழில் தருநர்களின் நேரடி பார்வையின் கீழ் பணிபுரியும் போது அதிக உந்துதலுடன் திறமையான வேலைகளை செய்வதாக அறியப்பட்டுள்ளது. அவ்வாறே தொழில் தருநர்களின் நேரடி பார்வையின் கீழான பணிகளின் போது அவர்களின் வெளிப்பாடுகள் மிகவும் விளைத்திறன் மிக்கதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிலை என்று வரும்பொழுது தொழிலாளி ஒருவருக்கும், தொழில் தருணருக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த உறவில் உள்ள அந்நியோன்ய நிலையின் காரணமாக வேலை என்பது சாதகமான நிலைப்பாடுகளையே கொண்டிருக்கும். தொழில் தருநர் மற்றும் தொழிலாளியின் மத்தியில் பல வாதம்மிக்க விடயங்கள் பரவலாக காணப்பட்டலும் அவை தொழிலின் உச்சபட்ச சாதகநிலைக்கு ஒரு ஸ்திரமான வழிகாட்டியாக இருப்பது வரவேற்க தக்க விடயமே ஆகும்.
இவ்வாறு தொழிலாளி ஒருவர் தமது சக பணியாளர்களுடனும், தொழில் தருனருடனும் சிறந்த உறவினை பேணவும், அவனது தொழில் நிலையில் திறமைமிக்கதுமாக மாற்றிக்கொள்ளவும் உதவும் வழிவகைகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
உணர்வுமிக்க நுண்ணறிவை உருவாக்குதல்
நீங்கள் புத்திசாலி, அறிவாளி, திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும். நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆளமுடியும். ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் உங்களின் வெற்றியானது உறுதிப்படுத்தப்படும். இவ்வாறான சகல திறமைகளும் இருந்தும் சரியானமுறையில் உங்களை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதனை நீங்கள் பலமுறை யோசித்து இருப்பீர்கள்.
அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும். ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன என்பது இன்னமும் உங்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது .
இவை அனைத்திற்குமான சரியான தீர்வு உங்களின் தனிப்பட்ட உணர்வுபூர்வ நுண்ணறிவினை சரியான முறையில் வளர்த்துக்கொள்வது ஆகும். உங்களின் உணர்வுகளை சரியான முறையில் கையாள்வதன் மூலம் தொழில் ரீதியான ஏற்ற இறக்கங்களை இலகுவாக சரி செய்து கொள்ளலாம் .
அவ்வாறே உங்களின் தனிப்பட்ட உணர்வின் தாக்கமானது உங்களின் தொழிலை வெகுவாகவே பாதிக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வது அவசியம் ஆகும் . அதாவது நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கை நிலையில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, நீங்கள் கோபம், சோகம் மற்றும் வேதனையான மனநிலையில் உள்ளபோது உங்களால் சரியான தொழில் வெளிப்படுத்தல்களை செய்வதற்கு முடியாமலே போய்விடும். இதன் காரணமாக உங்கள் தனிப்பட்ட உணர்வுகளை தொழில் நிலையில் வெளிகாட்டிக்கொள்ளாமல் சரியான முறையில் மனோநிலை சீர் செய்யும் திறனை அமைத்துக்கொள்வதன் காரணமாக திறனான வெளியீடுகளை உங்கள் தொழிலில் கண்டிப்பாக வெளிப்படுத்திக்கொள்ளலாம்
அடக்கும் உணர்வுகள் ஆபத்தை தரும்
உணர்ச்சிகளை அடக்குவதற்கு பதிலாக, அவற்றினை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக்கொள்வதே சிறந்த பலனைத்தரும். இது உங்கள் தொழில்ரீதியிலான பிணக்குகளை இலகுவாக எதிர்கொள்வதற்கு உதவிடும் . உங்களின் கோபம் மற்றும் கவலை உணர்வுகள் தூண்டப்படும் பட்சத்தில் அவற்றினை அடக்கி வைப்பதால் நீங்கள் உடல் ரீதியாகவும், மனோவியல் ரீதியாகவும் வெகுவாக பாதிப்படைவீர்கள். அவ்வாறே அவற்றினை அப்படியே வெளிகாட்டிவிடுவது உங்களுக்கும் உங்களை சூழ இருப்பவர்களுக்கும் அதிருப்தி நிலையினை ஏற்படுத்திவிட வாய்ப்புக்கள் உண்டு, எனவே இவ்வகை சந்தர்ப்பங்களின் போது உணர்வுகளை சரியான முறையில் கையாண்டு கொள்வதால் பல இன்னல்களில் இருந்தும் நீங்கள் தப்பலாம் என்பது அறியப்படுகின்றது.
சாதக நிலையினை நீங்களே உருவாக்குங்கள்.
தொழில் ரீதியிலான சாதகத்தன்மையினை உடைய உணர்வுகளைக்கொண்ட சூழ்நிலைகளை நீங்களே உருவாக்கவும். ஒரு புதிய யோசனையுடன் ஒருவரை அணுகும்போது, புதிய யோசனை அல்லது திட்டம் பரஸ்பர ஆதாயத்தை எப்படிக் கொண்டுவரும் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு விடயத்தையும் அணுகும் முதல் அதன் சாதகபாதக நிலைகளை அணுக தவறிட கூடாது.
உங்களின் நடத்தைகளில் கவனமாக இருங்கள்.
எந்த விடயத்தினதும் முக்கிய பண்பானது உங்களின் நல்ல நடத்தையிலேயே தங்கியுள்ளது. நீங்கள் தொழில் ரீதியில் யாரிடமாவது பேசுவதற்கு முன்னர் "இப்போது பேசலாமா?" அல்லது "இதுபற்றிய பேசுவது சரியா?" என்று எதிர்தரப்பினரிடம் கேட்பது சிறந்த அணுகுமுறைகளில் ஒன்று . இவ்வாறு நன்னடத்தை பண்புகளை தொழில் ரீதியில் கண்டிப்பாக வெளிகாட்டிக்கொள்ள தவறிட கூடாது.
வார்த்தைகளில் வெளிப்படாத விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் சொற்பிரயோகங்களை எவ்வாறு கவனமாகவும், நிதானமாகவும் தொழில் ரீதியில் பிரயோகம் செய்கின்றீர்கள் என்பது போல சொல்லில் அடங்காத உணர்வுகளை நீங்கள் செயல்களின் மூலம் வெளிகாட்டிடும் போதும் மிகவும் நிதானமான முறையில் நடந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகின்றது. சொல்லில் நீங்கள் வெளிப்படுத்துவதை விட செயலில் நீங்கள் வெளிப்படுத்தும் விடயங்களே எதிர் தரப்பினரை வெகுவாக சென்றடையும்.