用心感受世界 (Not all answers are found in Google) விமர்சனம் | Review

用心感受世界 (Not all answers are found in Google) by Triden V Balasingam
用心感受世界 (Not all answers are found in Google) விமர்சனம் | Review

用心感受世界 (Not all answers are found in Google)

இலங்கை கலைஞர்களின் படைப்புகளில் தரத்திற்கு என்றுமே குறை இருந்ததில்லை. அந்த வகையில் Triden V Balasingam அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சீன மொழியில் அமைந்த குறுந்திரைப்படம் உறவுகளின் ஆணிவேர் எதுவென மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எமக்கு தெரிவித்து இருக்கின்றது.

14 நிமிடங்கள், திரையில் இருவர் மட்டுமே தோன்றியிருந்தாலும் கதையில் ஒன்றித்து பயணிக்கும் பொழுது பல கதாபாத்திரங்கள் எம்மத்தியில் வந்து செல்கின்றன. மற்றும் பல பல பாட்டி தாத்தா கதைகளும் வந்து செல்லும்.

கதையின் கதாபாத்திரங்களாக தோன்றிய இருவரும் மிக இயல்பான நடிப்பின் மூலம் கதைக்கு மேலும் வலு சேர்த்து இருக்கின்றார்கள். பின்னணி இசை நம்மை எந்தவொரு இடையூறுகளும் இன்றி திரைக்கதையில் ஒன்றித்து பயணிக்க மிக அழகாக உதவி இருக்கின்றது.

திரைக்கதை, தகப்பன் மகள் மற்றும் பேத்தி இம்மூவருக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை எடுத்துக்காட்டி சமூகத்திற்கு சிறப்பான கருத்துக்களையும் தெரிவித்திருக்கின்றார்கள். தாத்தா தன் பேத்திக்கு சிறுசிறு அன்பளிப்புகளை வழங்குவதன் மூலம் தனது கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் அழகாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பழக்கத்தையும் இயக்குனர் மிக அழகாக காட்டி இருக்கின்றார்.

மேலும் உங்களது வாழ்வில் மிகச் சிறந்த விடையங்களை புகைப்படங்களாக மட்டும் சேர்த்து வைக்காமல் நினைவில் சேர்த்து அதனோடு பயணிக்கும் பொழுது மிகச்சிறந்த சுவையை வாழ்வில் அனுபவிக்க முடியும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

உண்மையான அன்பு கொண்ட ஆழமான உறவுகள் என்றும் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் அதற்கு எத் தடைகளும் தடைகள் அல்ல (Covid-19 Pandemic) என்பதினை மிக நேர்த்தியாக சொன்ன திரை குழுவிற்கு எம் வாழ்த்துக்கள். 

Article By TamilFeed Media, Canada
1548 Visits

Share this article with your friends.