பாகற்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

பாகற்காயிலுள்ள கசப்பு தன்மை உடம்பிலுள்ள தீங்கு பயக்கும் கிருமிகளை அழித்து ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும்.எனவே அன்றாட உணவுடன் சேர்க்க வேண்டும் அதற்கு பாகற்காயை நன்றாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவையோ இனிமை தரும்.இதன் பழத்தை அப்படியே சாப்பிடுவதும்,சாறு எடுத்து அருந்துவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இது சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும்,சர்க்கரை வியாதிக்கும்,மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகும்.

இதன் இலையை அரைத்து உடம்பு முழுவதும் பூசி காயவிட்டு பின்பு ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷ தன்மை உடம்பில் ஏறாது.

இதன் இலைச் சாற்றில் சிறிது வறுத்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

இதன் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சேர்த்து சிரங்கின் மேல் தடிப்பாக பூசி வந்தால் இரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

இதன் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

இதன் இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்தலாம்.

இதன் இலைச் சாற்றில் சிறிதளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர நீரழிவு நோய்த் தாக்கம் குறைவடையும்.

இதன் இலைச் சாற்றுடன் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் அருந்தி வந்தால் காசநோயை கட்டுப்படுத்த முடியும்.

இதன் வேரை நன்றாக அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கும் இது சிறந்த மருந்தாகும்.

Article By TamilFeed Media, Canada
2757 Visits

Share this article with your friends.

More Suggestions | Health