கறிவேப்பிலையிலிருந்து தைலம் தயாரித்து தலைவலியை குணப்படுத்தலாம்!

தலை இடி, தலைச்சுற்றுக்கு நிவாரணியாக இயற்கையாக கிடைக்கும் கறிவேப்பிலையை கொண்டு தைலம் தயாரித்து நலம் பெறுவோம்.  

உலக வெப்பநிலை மாற்றம் காரணமாக இன்று பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருமே தலைவலியை எதிர் கொள்கிறார்கள். தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது. எனவே இந்த கருவேப்பிலையை கொண்டு தைலம் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் இதோ.... 

கறிவேப்பிலை - 200 கிராம்

பச்சை கொத்தமல்லி - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

நல்லெண்ணை - 600 மில்லி லிட்டர்

 பசுப் பால் - 200 மில்லி லிட்டர்

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் அவ்வாறே அரைத்து வைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்து பின்பு சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 
ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து வெப்பமேற்றவும். சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை அதனுள் போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேற்றிய பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு நன்றாக காய்ச்சி தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டி அதனை நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் நாட்களில் குளிர்ந்த உணவு வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

Article By jeba rose, India
2970 Visits

Share this article with your friends.

More Suggestions | Health