சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறையும் இதயம் பலம் பெறும்.
ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு,தும்மல் ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் இவை குணமடையும்.
வெங்காயத்தைச் சுட்டு அதனுடன் மஞ்சள், நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து தொப்பலங்கள் (கட்டிகள்) மீது வைத்துக்கட்டினால் அவை உடனே பழுத்து உடையும்.
வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். இதை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.இதை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும்.வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.இது வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி ஜீரணத்துக்கு உதவுகிறது. மேலும் நல்ல தூக்கத்தையும் தரும்.
வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை பருகி வர நுரையீரல் சுத்தமாகும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது.
சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும். பொடுகுத் தொல்லை நீங்கும்.
வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும். வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். நாலைந்து வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறைந்து, பித்த ஏப்பம் மறையும்.
மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது அல்லது அதன் சாறு பருகிவந்தால் நோய் குறைவடையும்.
சின்ன வெங்காயச்சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.இதை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் பெறும்.
வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கும்.