இதில் விட்டமின் பி 6, விட்டமின் சி, விட்டமின் கே மற்றும் மாங்கனீஸ் சத்துகள், தாதுக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன், இரும்பு மற்றும் பல பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
இதை முழுவதுமாக வேகவைத்து உண்பதைக் காட்டிலும், அரை அவியலுடன் சாப்பிடுவதே சிறந்தது.
இவ்வாறு தினமும் சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
புற்றுநோய், நெஞ்சுச்சளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பு தருகின்றது.
இதை வேகவைக்கும்போது அந்தத் தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சு+ப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் இதன் முழுச் சத்துகளையும் பெறமுடியும்.
இதிலுள்ள வைட்டமின் கே இரத்தம் உறைதலை தடுத்தல் மற்றும் காயங்களை ஆற்றுதல் மற்றும் வலுவான எலும்புகளின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது .
இதிலுள்ள அதிக நார் சத்து உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
இதிலுள்ள நியாஸின் மற்றும் தயாமின் போன்ற வைட்டமின்கள் உடலில் ஏற்படும் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.
இதில் சோடியம் குறைந்த அளவிலும் மற்றும் கொழுப்பு, கலோரிகள் ஊட்டச்சத்துகள் போதிய அளவில் நல்ல ஆதாரமாக இருக்கிறது.
இதிலுள்ள பொட்டாசியம் சிறந்த செல் உற்பத்தி மற்றும் உடல் திரவ இயக்க தக்கவைப்பதிலும் உடலின் இரத்த அழுத்தம் மற்றும் பிற இதயம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.