உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாததற்கான காரணங்கள்

சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா?

எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். சரி இப்போது உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பார்க்கலாம்.

* சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது. ஃபேட்டி அமிலங்களில் இப்படி ஏற்றத்தாழ்வு இருப்பதால், அதன் காரணமாக உடலினுள் அழற்சி ஏற்பட ஆரம்பிக்கும். எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

* எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

* பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் Neu5Gc என்னும் பொருள் உள்ளது. இந்த உணவுகள் இதய நோய், புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்தும். குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும்.

* உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் நீரிழிவு, பற் சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும்.

* சுத்திகரிக்கப்பட்ட (மைதா) மாவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.

- From Facebook

Article By TamilFeed Media, Canada
3030 Visits

Share this article with your friends.

More Suggestions | Health