உங்களுக்கு தெரியுமா? பாதாம் உங்களின் வாழ்நாளை அதிகரிக்கின்றது என்று...

பாதாம் பருப்பு பொதுவாகவே விலை உயர்ந்ததாகக் கருதப்படுவதால், பலரும் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதேநேரம், தினசரி ஒரு பாதாம் பருப்பை உண்டுவந்தால் அதிலிருந்து கிடைக்கும் சிறப்பான சத்துகளோ ஏராளம்..

பாதாம் (வாதுமை) எனப்படும் கொட்டை அல்லது பருப்பு Prunus Dulcis எனப்படும் அறிவியல் பெயர் கொண்ட மரத்திலிருந்து பெறப்படுகின்றது. இந்தப் பருப்பு சற்று இனிப்புத்தன்மையையும் கொண்டது.

ஒரு கைப்பிடியளவு பாதாம் பருப்பு 161 கலோரி சக்தியையும் 2.5 கிராம் மாவுச்சத்தையும் (Carbohydrates) தரும். நாம் நினைப்பதற்கு மாறாகப் பாதாம் பருப்பின் மேற்பகுதியில் உள்ள பழுப்பு நிறத் தோலில்தான் சத்து அதிகம். அதில் ஆன்ட்டிஆக்சிடண்ட் இருக்கின்றது. மேலும் வைட்டமின் E சத்தையும் அதிகம் கொண்டது. அத்தோடு, 

  • பாதாம் பருப்பில் உள்ள மக்னீசிய சத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றது.
  • மாரடைப்பு ஏற்படுவதற்க்கான வாய்ப்புகளை குறைக்கின்றது. 
  • வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகின்றது.
  • ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டதும் மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகின்றது. 
  • மூளையை நன்கு செயல்பட வைக்கின்றது. 
  • நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயல்பட உதவுகின்றது. ​

​​ஆகவே முடிந்த அளவு தினசரி பாதாமை உட்கொள்வோம், ஆரோக்கியமாய் நெடுநாள் வாழ்வோம்.​

Article By TamilFeed Media, Canada
5702 Visits

Share this article with your friends.

More Suggestions | Health