மீன்களில் அதிகபுரதச்சத்துகள், ஓமேகா 3 அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. மீன் மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஓமேகா 3 அமிலம் மூளையைச்சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. ஞாபகசக்தி திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.
இரத்தக்கட்டு, இரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்சனை போன்ற எதுவும் வராது. மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு ஏற்படாது.
தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது மீன் உணவு. மீன் எண்ணெயைச் சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவு குறையும். வெள்ளை மீன் உணவுகளைக் காட்டிலும் க றுப்பு மீன்கள், சாலமன் மீன்கள்,நெத்தலி போன்ற சிறு மீன்களிலே சத்துக்கள் அதிகம் இருக்கிறது இவ்வாறான மீன்களை உணவாக உட்கொண்டால் சிறந்த பலனைப் பெறலாம்..