என்னதான் வேலை , களைப்பு என தம்மை தாமே ஆண்கள் குறை கூறிக்கொள்ளும் காலம் போய் பெண்களை விட அழகியலில் ஆண்கள் கொள்ளும் நாட்டம் அலாதியானது.
எவ்வாறாயினும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தம்மை அழகு படுத்திக்கொள்ள பொதுவாக விரும்பினாலும் அவர்களுக்கு அழகு நிலையம் சென்றோ அல்லது இதற்கென தனியாக கவனம் எடுத்தோ தம்மை அழகுபடுத்தி கொள்ள தயங்குவார்கள். அவ்வகையான ஆடவ்ர்களுக்கு இந்த எளிய முறைகள் கை கொடுக்கும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது.
ஆண்களின் அழகு சார்ந்த மன வினாக்களில் இந்த கேள்வி முக்கிய இடத்தை பிடிக்கிறது. எப்பொது குளிப்பது எப்படி குளிப்பது, தினமும் தலைக்கு குளிப்பதா போன்ற பல்வேறு வினாக்கள் எழும். தற்போது மாசுக்கள் அதிகம் சூழ்ந்திருப்பதால், தினமும் தலைக்கு குளிப்பதே சிறந்தது. இல்லாவிட்டால், தூசிகள் உச்சந்தலையில் படிந்து, பொடுகு வளர ஆரம்பித்து, அதனால் முடி உதிர ஆரம்பிக்கும். எனவே தினமும் இரசாயணப்பதார்த்தங்கள் அதிகம் நிறைந்த ஷாம்புக்களைப் பயன்படுத்தாமல், குறைந்தளவு இரசாயண கலவை கொன்ட (mild) ஷாம்புக்களைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் தலைக்கு குளித்து முடித்த பின்னர் துணியால் தேய்த்து துடைக்காமல், கையால் அப்படியே இயற்கையாக உலர வைக்க வேண்டும். மேலும் முடிந்த வரையில் சீப்புக்களைப் பயன்படுத்துவது தவிர்த்து, விரல்களால் தலையை சீவிக் கொள்வது சிறந்தது.
முகச்சவரம் செய்வது முட்டுக்கட்டையா?
ஆண்கள் பலருக்கு அதிகாலையில் எழும்புவது மிகவும் கடினமான விடயமே. இருப்பினும் முகச்சவரம் செய்துகொள்ள விரும்பினாலும் அதற்காக நேரம் அதிகம் செலவாகும் என்ற பயத்திலேயே பலர் தாடியுடன் திரிவார்கள். இவ்வகை சிரமத்தை தவிர்த்துகொள்ள இரவிலேயே முகச்சவரம் செய்து கொள்வது நல்லது. அதனால் முகமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
குறைக்க வேண்டியது குடிப்பழக்கத்தை.
மது மற்றும் போதை பொருட்களில் முக்கியமாக அல்கஹோலில் சர்க்கரை அளவு அதிகளவில் காணப்படுகிறது. இது சருமத்தை பாதிக்கும் தன்மையை அதிகளவில் கொன்டுள்ளது. எனவே அல்கஹோல் பாவனையை குறைத்து கொள்வதும் ஒரு சிறந்த உபாயமே
தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டுமே!!..
தூக்கமின்மையால் உங்களின் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? அப்படியெனில் சில்வர் கரண்டியை (Spoon) குளிர்சாதனப்பெட்டியில் சிறிது நேரம் வைத்து குளிர்ந்ததும், கண்களின் மேல் சிறிது நேரம் ஒத்தடம் கொடுங்கள். இதனால் உங்கள் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
முடி பராமரிப்பு
ஒவ்வொரு ஆணும் இரண்டு தொடக்கம் முன்று வாரத்திற்கு ஒரு முறை முடி திருத்தம் (Hair cut) செய்துகொள்ள வேண்டும். முடி திருத்தம் செய்து கொள்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு முடியின் வளர்ச்சி குறைவாக இருந்தால், 3 முதல் 4 வாரத்திற்கு ஒருமுறை முடி திருத்தம்( Hair cut ) செய்து கொள்ளுங்கள். இதனால் முடி ஆரோக்கியம் மேம்படுவதோடு, உங்களின் தோற்றமும் மேம்படும்.
சரும வகை
சருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்களைப் பயன்படுத்தும் முன், உங்கள் சருமத்தின் வகையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களைப் பயன்படுத்தி, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தலாம். முக்கியமாக சரும வகையை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற க்ரீம்களைப் பயன்படுத்தினால், அந்த க்ரீம்களின் உண்மையான பலனைப் பெறலாம்.