எல்லோரையும் ஈர்க்கும் இணையத்தளம் அமைத்திட யுக்திகள்

இணைய வாசிப்பாளர்களை கவரும் வகையில் வலைத்தளங்களை அமைப்பதெப்படி?

இணையத்தில் கிடைக்காத விடயங்களே இல்லை, இங்கு தேடப்படாத சொல்லே இல்லை எனும் அளவுக்கு வாழ்க்கை வேறு, உலகம் வேறு என்று இல்லாமல் இணையமும் மனிதனின் வாழ்வியலும் ஒன்றித்து விட்டது. ஒவ்வொரு சிறு விடயமாகினும் அது தொடர்பில் பரந்த அறிவினைப்பெற இணையத்தில் உள்ள வலைத்தளங்கள் நமக்கு பேருதவி புரிகின்றன.

நீங்கள் ஒரு தனி முயற்சியாளராகவோ, அல்லது எழுத்தாளராகவோ, அல்லது மாணவராகவோ இருக்கலாம். நீங்கள் எந்த துறையில் இருப்பினும் அந்த துறை சார்ந்த பரந்த விரிந்த அறிவினை பெறவும், நீங்கள் பெற்றுக்கொண்ட விடயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும், மேலும் வியாபார நோக்குடையவர் எனின் உங்களின் பொருட்கள் சேவைகளினை விற்று வியாபாரத்தை விருத்தி ஆக்கிடவும், உங்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான இந்த காலத்திற்கு ஏற்றதொரு யுக்தியாக கருதப்படுவது வலைத்தள இடுகைகள் ஆகும். உங்கள் அனைத்து தேவைகளுக்கான மூலமாகவும் விளங்க கூடியவை வலைத்தளங்கள் என்றால் அது மிகையாகாது.

எந்தவொரு முயற்சியாண்மைக்கும் அதன் முன்னேற்றத்திற்கு வழித்துணையாக விளங்கக்கூடிய இந்த வலைத்தளங்களின் மூலம் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் இலாபம் ஈட்டுவதே முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த வலைத்தளங்களின் மூலம் நாம் நேரிடையான பலாபலன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றி பார்க்க வேண்டும்.

எந்தவொரு வலைத்தள பதிவிற்குமான அடிப்படை நோக்கமானது பார்வையாளரை சென்றடைவதாகும். இதன்மூலம் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய மக்கள் எவ்வாறு நாம் வெளிப்படுத்தும் விடயத்தினை அறிந்துகொள்கிறார்கள் என்பதே இணையதள உரித்தாளர்களுக்கான பெரும் சவால் ஆகும்.

ஒவ்வொரு தனிப்பட்ட இணையதளமும் அதன் அமைப்பிற்கேற்ப வேறுபட்ட இலக்குடைய பார்வையாளர்களை கொண்டிருப்பதாகும். உதாரணமாக வியாபாரம் சம்பந்தமான இணையத்தளத்தின் பார்வையாளர்கள் நுகர்வோர்களேயாகும். இவ்வாறு ஒவ்வொரு தளத்திற்குமான தனிப்பட்ட இணைய இலக்குகளை அறிந்து வைத்திருத்தலே ஒவ்வொரு இணைய உரித்தாளர்களினதும், இனைய எழுத்தாளர்களினதும் கட்டாய கடமை ஆகும்.

பொதுவாக என்தவ்வொரு இணையதளமும் 24 x 7 சேவையினை வழங்கிட கூடியதாகவும், எப்போதுவேண்டுமானாலுமும் உறுதியான தரவுகளை வெளிப்படுத்த கூடியதுமாக இருத்தல் அவசியம். 

வலைத்தள தரவுப் பார்வையாளர்களின் முக்கியத்துவம் (The Importance of Website Traffic)

வலைத்தள போக்குவரத்து என்றழைக்கப்படும் இணைய தரவுகளினதும் பார்வையாளர்களினதும் வருகை நிலையானது ஒவ்வொரு இணையத்திற்கும் முக்கியமான அடிப்படை விடயமாகும். இது இணையத்தளத்தின் நோக்கத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் அதன் மூலமாக நேர்மறையான வெளியீடுகளை எட்டிக்கொள்ளவும் உதவிபுரிவது ஆகும்.

வலைப்பாவனையாளர்களை அதிகப்படுத்துவதன் மூலம் பின்வரும் நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் .

  • இணைய சந்தைப்படுத்தலின் உயரிய தன்மையையும் அதன் நிலைப்பாட்டையும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
  • உங்களின் பார்வையாளர்கள் பற்றிய அடிப்படை முடிவுகளை பெறுவதற்கான நுண்ணிய விடயங்களினுடனான சரியானதும், தெளிவானதுமான அறிவினை பெற உறுதுணையாக இருக்கும்.
  • உங்களின் தேடுபொறி மேம்படுத்தல், தேடல்குறிகளின் உறுதித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையினை அறிந்து கொள்வதும் அதற்கான யுக்திகளை மேற்கொள்ளவும் உறுதுணையாகவும் இருக்கும்.
  • வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொள்ள புதிய வழிவகைகளை அதிகரிக்கவும் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

இணையப்பாவனையாளர்களை அதிகரித்துக்கொள்வது எப்படி ?

இதுவரையில் அண்ணளவாக 2 பில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வலைத்தளங்கள் இணைய உலகில் உலா வருவதாக அறியப்படுகின்றது. ஒவ்வொரு இணையத்தளத்திற்கு போட்டியாக ஏதேனும் வேறொரு இணையத்தளம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனாலும் அனைத்து இணையப் பயனாளர்களை ஈர்ப்பது உங்களின் வேலை அல்ல. மாறாக பார்வையாளர்களை அதிகப்படுத்துவதே உங்களின் நோக்கமாகும் என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். இவ்வாறு இணையப்பாவனையாளர்களை அதிகர்த்துக்கொள்வதற்கான யுக்திகள் இவைதான்.

1. ஒவ்வொரு பக்கங்களுக்குமான தேடுபொறி இயந்திர தேர்வினை மேம்படுத்துவது.

தேடுபொறியில் மூலம் பார்வையாளர்களை தம்வசப்படுத்தவும், அதிகரிக்க செய்வதற்குமான தந்திரோபாய யுக்திகள் உள்ளன. இது உங்கள் பார்வையாளர்கள் தேடும் பொறி அல்லது சொல்லுக்கான உயர்தரமானதும் , துல்லியமானதுமான உள்ளடக்கத்தினை உருவாக்குகின்றது.அவ்வாறே அவ்வந்த பக்கங்களுக்கான சுருக்கமானதும் தனித்துவமானதுமான "மெட்டா டேக்" (META TAG) என்றழைக்கப்படும் தேடுபொருளையம் விளக்கமாக எழுத்துவதுவும் வாசகர்களை அதிகரிக்க செய்யும் முயற்சியாகும்.

 2. ஆய்வுத்தளங்களை பட்டியலிடல் 

ஒன்லைன் மூலமான அடைவுகளை மற்றும் ஆய்வுத்தளங்களை பட்டியலிடுவது சிறந்த யுக்தியாகும். அதாவது நீங்கள் உங்களின் தனிப்பட்ட பக்கங்களை சமூக வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து வைத்திருப்பவர் ஆயின், உங்களின் தேடல் மற்றும் விருப்பம் தொடர்பின்னலான மேம்படுத்தலை அவை தன்னிச்சையாக வெளிப்படுத்தும்.இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட பட்டியல் மூலமாக புதுப்பித்தல் மற்றும் இணைய வாசகர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்ளுதல் இலகுவாக்கப்பட்டுள்ளது.

 3. சமூக வலைத்தளங்களின் ஊடாக சதுரக்குறிச்சொல் (#HASHTAG) மூலம் இடுகையிடல் .

சதுரக்குறிச்சொல் என்பது ஒரு விடய���் சம்பந்தமான மையக்கருத்தினை கொண்ட சொற்பதத்தினை சதுரக்குறியின் மூலம் வகைப்படுத்துதலும் தனிப்படுத்துவதுமாகும். இதனால் தேடுபொறியானது இலகுபடுத்தப்படுகின்றது.

இவ்வாறு நமது வலைத்தளத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றிற்குமான தனித்தனி மையக்கருத்து சொற்களை எவை என்று கண்டறிந்து அவற்றினை சதுரக்குறியீட்டு குறிச்சொல்லாக சமூக வலைத்தளங்களில் பகிரும்போது குறிப்பிட்ட சொல்லினை ஏதேனும் ஒரு வகையில் தேடும்பொழுது நமது பக்கத்தினையும் அதன் தேடுதல் விளைவாக இணையம் வகைப்படுத்தும். அவ்வாறே தனிப்பட்ட நமது பக்கத்தினையும் சமூக வலைத்தளத்தினூடாக பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையானது அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

4. எல்லைப்பக்கத்தினை (Landing Page) முடிந்தளவு உபயோகப்படுத்துதல்.

தேடுபொறிகளின் மூலம் ஒவ்வொரு சொற்றொடர்களை அல்லது வாக்கியத்தினைக்கொண்ட விடயத்தை தேடி வரும் கடைசி அடைவு பக்கத்தில் அதற்கான முழு அடைவுகளையும் கொண்ட பதிவுகளை பார்வையாளர்களின் முழு தேவையையும் பூர்த்தி செய்வது போல அமைத்துக்கொடுப்பது வருகையாளர்களை அதிகப்படுத்துவதற்கான சிறந்த யுக்தியாகும். தேடிவருபவர்களின் தேவைகள் ஒரே இடத்தில் பூர்த்தியாவதுதான் எந்தவொரு நுகர்வாளனுக்குமான உச்சபட்ச திருப்தி நிலையாகும். இது வலைத்தளம் என்பதில் மட்டுமல்ல வியாபார யுக்தியாகவும் கொள்ளப்படும்.

5. நீண்ட சொற்றொடருடனான தேடுபொறியினை உருவாக்குதல் அல்லது பல்வகை சொற்களை உள்ளடக்குதல் 

தேடுபொறி சொற்றொடர்களே வலைப்பங்களுக்கான திறவுகோல். அவை மிகவும் குறுகியதாக அமைந்துவிடுமாயின் அதற்கான தேர்வுகள் அதிகமாகவே காணப்படும். எனவே நமது வலைப்பக்கத்திற்கான வருகையாளர்களின் அளவு சிதறடிக்கப்படும். அதற்கு மாறாக ஒரு பக்கத்திற்கான உள்ளடக்க பொறி சொற்றொடர்கள் பலவற்றை கூட்டாகவும் மிக நீண்ட சொற்றொடராகவும் உள்ளடக்கும் போது தேடல்கள் பலவற்றின் இறுதி விளைவாக நமது பக்கமே முன்னிலை வகிக்கும் . 

உதாரணமாக உணவுப்பொருள் ஒன்றினை பற்றிய விளக்கப்பதிவாக உங்கள் பக்கம் அமையும் போது அந்த உணவு சம்பந்தமான உள்ளீடுகள் மட்டுமன்றி அதற்கு ஒத்திசைவானதும் , இணையானதுமான சொற்கள், குறிப்புகள் மற்றும் உள்ளீடுகளை தொடர் சொற்களாக உள்ளகப்படுத்துவதானது சிறந்தது. இதன்மூலம் எவ்வகை தேடல் பொறி பிரயோகப்படுத்தினாலும் அவற்றிற்கான ஒரே தேடல் விளைவு பக்கமாக இந்த குறிப்பிடத்த பக்கமே இணையத்தில் காட்டப்படும் . இது ஒரு சிறந்த யுக்தியாக அமையும் என்பதை ஐயமில்லை.

6. மின்னஞ்சல் சந்தைப்படுத்தலை மேற்கொள்ளுங்கள்.

உங்களின் பொருள் மற்றும் சேவை தொடர்பில் வலைப்பக்கத்தில் பதிவிடுதல் தொடர்பான செய்திக்குறிப்பு மற்றும் மேம்படுத்தல் விபரங்களை பார்வையாளர்களின் மின்னஞ்சலுக்கு அறிவிப்பு செய்தியாக அனுப்பும் முறைமை வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் இன்னுமொரு வழி ஆகும். முதல் தடவை வாசகர்கள் நமது இணையத்தளத்தை பார்வையிடுவது மட்டுமன்றி அவர்களது மின்னஞ்சல் முகவரியினை நமது வலைப்பக்கத்தில் பதிவேற்றுவதன் மூலம் நமது பக்கத்தில் நாம் பதிவிடும் அனைத்து விடயங்கள் தொடர்பான அறிவிப்புக்களை முன்னராகவும் சாராம்சமாகவும் அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களின் நம்பகத்தன்மை அதிகரித்து வருகையும் அதிகரிக்கும் .

7. இணைய உலகில் ஒன்றித்திடுங்கள்.

எமது வலைத்தளம் பற்றிய விபரங்களை இணையத்தில் அடிக்கடி பரப்புரை செய்தும், குழுக்கள், நபர்கள், வெளியாட்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும், எமது வலையமைப்பை விஸ்திரணப்படுத்துவதும் சிறந்த யுக்தியாகும். தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள், தொலைபேசி செயலி குழுக்கள், தொடர்பாடல் இணைப்புக்கள் போன்றவற்றின் மூலம் நமது வலைத்தளம் பற்றி அடிக்கடி பரப்புரை செய்வதன் மூலம் அனைவருக்கும் இது தொடர்பான அறிவுறுத்தலை வழங்குவதுடன் வாசிப்பாளர்கள் அளவு எல்லையை மற்றும் வருகை ஊடகங்களை விஸ்திரப்படுத்துவதன் மூலம் எட்டப்படும் வாசகர்களின் அளவு விசாலமடையும் .

Article By TamilFeed Media, Canada
1683 Visits

Share this article with your friends.

More Suggestions | Technology