சமூகவலைத்தள மூலோபாயங்களை வளர்த்துக்கொள்வது எப்படி

தொழில்சார் மூலோபாயங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் மேன்படுத்திக்கொள்ளலாம் 
சமூகவலைத்தள மூலோபாயங்களை வளர்த்துக்கொள்வது எப்படி

தற்கால தொழில்சார் வல்லுனர்களிடையே சமூக வலைத்தளங்கள் மிகவும் முக்கிய இடத்தில் உள்ளது. அவர்களின் தொழில்சார்ந்த அனைத்து விடயங்களுக்குமான தொழில்நுட்பவியல் சார்ந்த ஊடகமாக சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றது. அவ்வாறே கற்றல், புத்துருவாக்கள் மற்றும் வணிகவியல் போன்ற பல்வேறு விடயங்களுக்குமான சிறந்த ஊடக பங்களிப்பினை சமூக வலைத்தளங்கள் ஆற்றிவருகின்றது. இவ்வாறு தொழில் ரீதியில் சமூக வலைத்தளங்களை பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் மூலோபாய அபிவிருத்திக்கென பயன்படுத்துகின்றது.

இன்றைய உலகின் அதிநவீனத்துவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்சார் முதன்மை காரணியாகவே சமூக வலைத்தளங்கள் உள்ளது. பெருநிறுவனங்களும் முயற்சியாண்மை கட்டமைப்புக்களை தமது வியாபாரக்குறி மேம்படுத்தல் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கென இந்த சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவது அறிந்ததே. இதற்கென பல்வகை சமூக வலைத்தளங்களும் மக்களை இலகுவாக கவரும் வகையில் இருப்பது அணைத்தது தரப்பினருக்குமான உதவியாக காணப்படுகின்றது.

இவ்வாறு சிறந்த முறையில் உங்களின் வர்த்தக மற்றும் தொழில்சார் மேம்படுத்தல்களுக்கென சிறந்த மூலோபாய கருவியாக சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனை காணலாம்.

பல்வகை அணுகுமுறைகளை உருவாக்குதல்.(Develop a multi channel approach)

நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களின் பல்வகைமையும் அவற்றின் மேம்படுத்தல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவதுடன் தினசரி புதிய புதிய யுக்திகள் மூலம் தொடர்ந்தும் மேம்படுத்தல் விடயங்களை அனைத்து சமூக வலைத்தளங்களும் கொண்டுள்ளன. அவ்வாறே ஊடகமாகும் சமூக வலைத்தளங்களும் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இவற்றின் மூலம் பல்வகை மக்களை ஒரு சமூக வலையமைப்பின் ஊடாக இலகுவாக சென்றடையக்கூடிய தன்மை உருவாகியுள்ளது. எனவே ஒவ்வொரு சமூக தளத்திற்கும் ஏற்ப நமது புத்துருவாக்கங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான அனுகுமுறைகளை அறிந்துகொள்வதுடன் அவற்றை எவ்வாறு ஆக்கபூர்வமாக முன் கொண்டு செல்லலாம் என்பதனையும் காணலாம்.

சமூக வலைத்தள பாவனையாளர்கள் எவ்வகை நோக்குடையவர்களாகவும் இருக்கலாம், எந்த ரீதியிலும் காணப்படலாம். பொதுவாக சமூக வலைத்தளம் ஒன்றினை மட்டுமே நம்பி சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்சார் மூலோபாயங்களை நாம் பிரயோகிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்த கூடிய சாத்தியம் உள்ளது. அவ்வாறே தமது இலக்கு வாடிக்கையாளர்களை அறிந்துவைத்துக்கொள்ளும் பட்சத்தில் அவர்களின் தன்மைக்கேற்ப அணுகும் விதமாக, அவர்களால் பயன்படுத்தப்படும் சந்தைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் செயல்பாடுகளுக்கு ஏற்ப சமூக வலைத்தளங்களை பயன்படுத்தல் அவசியம் ஆகின்றது.

இதேபோல், சமூக ஊடக விளம்பரதாரர்கள் வாய்ப்புக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அடையும் ஒரு பன்முகத்தன்மையை அணுக வேண்டும். அவ்வாறு உங்களின் சந்தைப்படுத்தல் உபாயங்களுக்கான அணுகுமுறைகள் தனித்துவமானதாக இருக்க வேண்டியதை உறுதி செய்துகொள்வது சிறந்த பலனைத்தரும் என்பதை மறந்திட வேண்டாம்.

செல்வாக்குடைய சந்தைப்படுத்தலுக்கு முதலிடுதல் (Invest in influencer marketing).

சந்தைப்படுத்தலை இலகுவாக்கும் உபாயமே செல்வாக்குடைமை சந்தைப்படுத்தல் ஆகும். இன்றைய நவீன முறைமையிலான சந்தைப்படுத்தல் உபாயங்களில் இது முக்கியத்துவம் பெருகின்றது.

செல்வாக்குடைமை சந்தைப்படுத்தல் என்பது எமது இலக்கு வாடிக்கையாளர்கள் மீது அதிகமாக செல்வாக்கு செலுத்தும் விடயங்கள் மற்றும் காரணிகளை ஊக்குவிப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தல் யுக்தி ஆகும். இதன் மூலம் இலகுவாக எமது தொழில்சார் மூலோபாய மேம்படுத்தலை வெற்றிகரமாகவும் இலகுவாகவும் மேற்கொள்ளலாம் என்பதனை அறியலாம். உலகின் முன்னணி வர்த்தக குறியீட்டினை கொண்டுள்ள நிறுவனங்கள் இந்த முறையினையே பயன்படுத்துவதனை அறிய முடிகின்றது.

விளம்பரப்படுத்தல் முறைகளுக்கு சவால் விடுவதான எச்சரிக்கையினை இணைய பயன்பாடுகள் விடுத்துவருகின்றன. அவ்வாறே ஒருசில சமூகவலைத்தள விளம்பரப்படுத்தல்கள் சர்வசாதாரணமாகவே புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணியானது கட்டற்ற இணையப்பவனையாளர்களும், அவர்களுக்கான பல்வகை விருப்பத்தேர்வுகளுமே ஆகும் . இதன் காரணமாக பொருட்கள் சேவைகளை நாம் என்னதான் சமூக வலைத்தளங்களில் சந்தைப்படுத்தி விளம்பரம் மேற்கொண்ட போதிலும் இலகுவாக இணைய பாவனையாளர்களால் அவை புறக்கணிக்கப்படுவதனை அவதானிக்கலாம்.

இதனை சீர் செய்யும் நோக்கில் சமூக ஊடகங்களில் உங்களின் வெளிப்படுத்தல் தொடர்பிலான அனுசரணை விளம்பரப்படுத்தல்கள் மேற்கொள்வது சிறந்தது.

விமர்சனங்களை வரவேற்றல். 

எந்தவொரு பொருளும் சேவையும் கண்டிப்பாக விமர்சிக்கப்படவேண்டியது நல்ல பலாபலனை தரும். அவை தொடர்பான சாதக மற்றும் பாதக கருத்துக்கள் பெறப்படும் போதுஎம்மால் மேம்பட்ட சேவைகளை தவறுகள் திருத்திக்கொண்டு வழங்கிட முடியும். அவ்வாறே கருத்துக்கள் பெறப்படும் பட்சத்தில் அதற்கான விரைவான பின்னூட்டல்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்துகொள்ள முடியும்.

சமூக வலைத்தளங்களில் பொதுவாக எவ்வகை உள்ளடக்கங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன? மாறும் எவ்வகை உள்ளடக்கங்கள் மறைக்கப்படுகின்றன என்பது தொடர்பில் இலகுவாக கை��ாளலாம். அவ்வாறே Facebook மற்றும் Instagram ஆகிய சமூக வலைத்தளங்களின் மூலம் இணைப்பினை மேற்கொள்வதற்கான அனைத்துவித பொறிமுறைகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதனை அறியக்கூடியதாக உள்ளது. 

அளவீடுகள் மூலம் மூலோபாய அணுகுமுறைகள் 

சமூக வலைத்தளம் மூலமான மூலோபாய அணுகுமுறைகள் சரியாக இயங்குகின்றனவா என முதலில் ஆராய்வது அவசியம் ஆகும். இதற்கு பகுப்பாய்வு தொடர்பான பல்வேறுபட்ட இணையங்களும், மூலங்களும், பொறிமுறைகளும் காணப்படுகின்றன. இவற்றினை கையாள்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தேர்வு, அணுகுமுறைகள் போன்ற அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டு சரியான முறையில் சந்தைப்படுத்தல் உபாயங்கள் இயக்கம் பெறுகின்றன.

தெளிவானதும் தனித்துவமானதுமான வியாபாரக்குறி தெளிவூட்டலை மேற்கொள்ளல் 

சமூகவலைத்தளங்கள் என்பது அனைத்துவித வாடிக்கையாளர்களினதும் தொடர்ச்சியான வருகைதரும் இடமாகும். அவர்களுக்கு தேவை எது? தேவை அற்றது எது? என்ற அனைத்து விருப்ப தேர்வுகளையும் சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்துகொள்வது இலகுவாக உள்ளது. இதனை மையமாகக்கொண்டு ஒருதெளிவானதும் , உறுதியானதுமான வியாபாரக்குறி தொடர்பான தெளிவூட்டலை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது இலகுவாகும்.
ஒத்திசைவான பல்வகை ஊடக அணுகுமுறைகளை உபாயங்களாக கையாண்டு சமூக வலைத்தளங்களின் மூலம் மூலோபாய விருத்தியினை திறம்பட செய்துவிட இந்த முறை உதவியாக இருக்கும்.

Article By TamilFeed Media, Canada
2180 Visits

Share this article with your friends.

More Suggestions | Technology