நிறுவன வளர்ச்சிக்கு நுட்பவியல் சந்தைப்படுத்தலின் அவசியம்

நிறுவன வளர்ச்சிக்கு நுட்பவியல் சந்தைப்படுத்தலின் அவசியம்

Digital Marketing 

உங்களது தொழில் முயற்சியானது எந்தளவு சிரியளவிலானதாக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு பெரிய முயற்சியாக இருந்தாலும் சரி இன்றைய நவீனத்துவ காலத்திற்கு ஏற்ப அதனை நுட்பமயப்படுத்திக்கொள்வது சிறந்தது. அந்த தொழிலில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் என்பது பல மட்டங்களிலும் இடங்களிலும் பயன்படுகின்றது. அவ்வாறே வர்த்தகத் தொழிலில் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வின்போது நுட்பவியல் சந்தைப்படுத்தல் (DIGITAL MARKETING) அத்தியாவசியமாகின்றது.

மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்தும் முறைமையே இந்த நுட்பவியல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) ஆகும். இத்தகைய சந்தைப்படுத்தல் முறைமையில் பல உத்திகள் (strategy) மூலம் பொருட்கள் / சேவையை சந்தைப்படுத்தலாம். 

கணினிமயப்படுத்தப்பட்ட நேரலை நுட்பத்தின் (Online ) வழியாக பல நுட்பவியல் சந்தைப்படுத்தலை எவ்வித செலவும் இல்லாமல் செய்துகொள்ளலாம்.அவ்வகை யுக்திகளை இங்கு பார்க்கலாம் 

  • சமூக ஊடக சந்தைப்படுத்தல் (Social Media Marketing) 

இன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள சந்தைப்படுத்தலை பின்பற்றுவது அவசியமாகும்.

Face book, Twitter, Google plus, linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் (products) / சேவைகள் (service) வழங்குகிறீர்கள், அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.

தொழிலைப் பற்றின தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (video), இன்போ கிராபிக்ஸ் (infographics), கிராபிக்ஸ் மற்றும் வடிவமைப்புக்களை (graphics & design) பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும்.

முகநூல் குழுக்கள் (Face book group), கூகிள் ப்ளஸ் (google plus collection) போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம். சமூக வலைத்தளத்தில் அதிகமான follower களை கொண்டவர்கள், ஆளுமை கொண்ட மனிதர்கள், பிரபலமானவர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களின் வலைத்தள பக்கத்தில் தொழிலைப் பற்றி பகிர செய்யலாம். 

  • காணொளி சந்தைப்படுத்தல் (Video Marketing)

தொழில் மற்றும் சேவையை பற்றி வீடியோ (video) மூலம் மிக எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும்.அறிவிப்பு பலகை , விரிவாக்கம் காணொளி , அனிமேஷன் காணொளி , அறிமுக காணொளி, விளம்பர காணொளி , குறியிலிட்டு விளம்பர காணொளி ,தொழிற்தகைமை பேச்சாளர்களின் காணொளி, (Whiteboard & Explainer Videos, Animation video, Intro video, Ads video, promotional & brand videos, professional spokesperson video )போன்ற பல தரப்பட்ட காணொளிகள் மூலம் தொழிலை பற்றி சந்தைப்படுத்தலாம். 
வீடியோவை தயாரித்து செய்து அதை YouTube, Facebook and Vine, Dailymotion and Vimeo, Snapchat, Instagram போன்ற பல தளங்களில் பதிவிடலாம். இதை முற்றிலும் எவ்வித செலவும் இல்லாமல் செய்யலாம்.

  • தேடுபொறி மேம்படுத்தல் (Search Engine Optimization (SEO) 

நமக்கு எந்த தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் கூகுள், யாஹூ போன்ற இணைய தேடு பொறிகள் (search engine) மூலமே தேடுகிறோம். ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன் இணையதளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம்பெறவேண்டும். தேடுபவர்கள் பெரும்பாலும் முதல் 4 பக்கங்களில் என்ன இணையத்தளங்கள் இடம்பெறுகிறதோ அதை மட்டுமே அணுகுவர். 

இதனால் தொழிலின் இணையத்தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கங்களில் இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காகதேடுபொறி மேம்படுத்தல் என்ற Search Engine Optimization (SEO) உத்திகள் பயன்படுத்தப்படுகிறது. Search Engine Optimization (SEO) மூலம் இணைய தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டுவரலாம்.

  • தேடல் பொறி சந்தைப்படுத்தல் (Search Engine Marketing (SEM)

தேடல் பொறி சந்தைப்படுத்தல்(Search Engine Marketing (SEM) என்பது ஒரு வகையான இணைய மார்க்கெட்டிங் (internet marketing) ஆகும். PPC (Pay per click) ads, CPC (cost per click) ads, CPM (cost per impressions) ads – உதாரணத்திற்கு google Adwords, Search analytics, Web analytics, Display advertising, Ad blocking, Contextual advertising, Behavioral targeting, Affiliate marketing, Mobile advertising போன்றவைகள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இணைய நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவை கட்டணங்கள் வசூலிக்கின்றன.

  • உள்ளடக்க சந்தைப்படுத்தல் (Content Marketing)

தொழிலை பற்றிய உள்ளடக்கத்தை சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) வலைப்பதிவில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது,உள்ளடக்கத்தினை சமூக வலைத்தளத்தில் (social media) பதிவிடுவது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுவது, காணொளிகளை (visuals,video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது போன்ற யுக்திகளால் இதனை கையாளலாம்.
தொழில் சிறியதோ, பெரியதோ வாடிக்கையாளர்களை இழுக்க இந்த யுக்தியானது சிறந்தது ஆகும் 

  • ���ின்னஞ்சல் சந்தைப்படுத்தல் (Email Marketing) 

வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி தெரியப்படுத்த அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது இந்த முறை ஆகும். பல மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் மூலம் மொத்தமாக மின்னஞ்சல்களை அனுப்பலாம். Mailchimp, Aweber, Constant contact, freshmail, madmimi, icontact போன்ற பல நிறுவனங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி வரை இலவச சேவையை வழங்குகிறது.

  • தொழில் கதைப்பகிர்வு (Story Sharing)

பல இணையத்தள ஊடகங்கள் ஸ்டார்ட் அப், தொழில் கதைகளை (stories) பதிவிடுகிறது. நிறுவனத்தைப் பற்றின கதைகள், தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுத அந்த இணைய ஊடகத்தை அணுகலாம். 

  • செல்வாக்குடையோர் மூலம் சந்தைப்படுத்தல் (Influencer Marketing)

மிகவும் பிரபலமான, ஆளுமை மிக்க மனிதர்களிடம் அணுகி தொழிலை பற்றி அவர்களின் சமூக வலைத்தள பக்கங்கள், வலைப்பதிவுகள் , நெட்வொர்க்கிங் (networking), தொடர்புகள், புத்தகங்கள் ஆகியவற்றில் பகிர சொல்லலாம்.

  • உள்ளாக்கப் பட்டியலிடல் Local Listings

உள்நாட்டு வணிக விபரக்கொத்து (Local business directory), கூகிள் வரைபடம் (google map), bing map, local citations ஆகியவற்றில் குறிப்பிடலாம். promo.lk, ikman.com , ,ஆகியவற்றின் மூலமும் விளம்பரப்படுத்தலாம்.

  • அலைபேசி சந்தைப்படுத்தல் (Mobile Marketing)

இந்த நவீன யுகத்தில் அலைபேசி இல்லாத கைகளை காண முடியாது. எனவே எமது வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் நேரடியாக தகவலக்கை அனுப்ப முடியும்பெரும்பான்மையானவர்கள் இணையத்தை மொபைல் மூலமே பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளரின் மொபைல்க்கு நேரடியாக தகவல், செய்திகள் போன்ற அறிவிப்புகளை அனுப்பலாம். dialog , mobitel போன்ற சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட மொபைலுக்கு அறிவிப்பை அனுப்ப இலவச சேவையை அளிக்கின்றன.

தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த செய்ய தொலைபேசி செயலிகள் , தேடுபொறி விளம்பரங்கள் , SMS, QR codes, In-game mobile marketing போன்ற பல யுக்திகளை பயன்படுத்தலாம்.

Article By TamilFeed Media, Canada
4118 Visits

Share this article with your friends.

More Suggestions | Business