பணமில்லாமல் தொழில் தொடங்க வழிகள்

பெரும்தொகை பணமின்றி வியாபார முயற்சிகளை சிறப்பாக முன் கொண்டுசெல்வதற்கான வழிவகைகள் இவைதான்.

மனிதர்களான நமக்கு முக்கிய தேவையாக இலகுவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளே பெரும்பாலானவர்கள் மத்தியில் உள்ள விடயம் ஆகும். புதிய முயற்சியாகட்டும் அல்லது ஏற்கனவே செய்துவரும் வேலைகள் ஆகட்டும் பணத்தை குறைவாக செலவுசெய்து அதிக இலாபம் ஈட்ட வேண்டும் என்பதே அனைவரினதும் ஒரே எண்ணமாக அமையும்.

நீங்கள் சொந்தமாக ஓர் புதிய முயற்சியை ஆரம்பிக்கும் எண்ணமுள்ளவராக இருக்கலாம், அல்லது ஏற்கனவே தொழில் ஒன்றில் இருந்துகொண்டு மேலும் பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவராக கூட இருக்கலாம். இதற்கான பல்வேறுபட்ட யோசனைகளை நீங்கள் மனதிற்குள் வடிவமைத்து வைத்திருப்பீர்கள். ஆயினும் அவற்றை ஆரம்பிக்க போதுமான அளவு முதலீடுகளோ, அல்லது பண உதவியோ உங்களிடம் இல்லாமல் இருக்கும். இவ்வாறு பண பற்றாக்குறை காரணமாக முயற்சிகளை தொடங்கிடும் முன்னமே யோசனைகளுடன் மட்டுமே ஆரம்பிக்க முடியாமலேயே முடிந்து போவதாக அமைந்து விடும்.

பணம் என்பது உங்களின் முயற்சிகளுக்கு தடை என்ற நிலையை கடந்து பணமுதலீடுகள் பெருமளவு இல்லாமல் தொழில் முயற்சிகளை இலகுவில் தொடங்கிட வழிகள் இருப்பது அனைவரும் விரும்பத்தக்கது தானே ? 

முதலீடுகள் இல்லாமல் தொழிலை தொடங்குதல் என்பது மேலோட்டமாக பார்த்தோமானால் ஏதோ பாரிய பிரச்சினையை போன்று நமக்கு தோன்றிட கூடியது.பல நல்ல முயற்சிகளின் கனவுகளை இந்த முதலீடு என்ற முட்டுக்கட்டை முடக்கி விடுவதை யாரும் மறுக்க முடியாது. எந்தவொரு தனிப்பட்ட முதலீடுகளும் பெரிய சுமையாக இல்லாமல் தொழில் முயற்சியை தொடங்குதல் என்பது சாத்தியமான விடயம் என்பதை நீங்கள் முதலில் அறிந்துகொள்ளுங்கள்.

முதலில் தொழில் முயற்சியொன்றினை தொடங்கிட பண முதலீடுகள் ஏன் அவசியமாகின்றது என்பதனை பார்ப்போம். எந்தவொரு வணிக முயற்சி அல்லது வியாபாரமாகட்டும் அதனை தொடங்கிட சீரானதொரு தொடக்க கட்டணம் என்ற வரையறை அவசியம் அற்றது . சிறியளவானதோ அல்லது பெரும்தொகையானதோ முதலில் உங்கள் நிறுவன நிதிக்கான வரையறையை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.அவ்வாறே அதற்கு மாற்றீடாக ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று கண்டறிந்து அது பற்றிய ஆயத்தங்களை செய்துகொள்வது சிறந்தது ஆகும் .

தொழில்முயற்சி ஆரம்பிக்க முதல் பின்வரும் வழிவகைகளை கொண்டு ஆயத்தப்படுத்திக்கொள்வது நல்லது.

1. பிரதேச வாரியான அனுமதி உரிமங்கள்.

நீங்கள் தொழில்முயற்சியனை ஆரம்பிக்கப்போகும் இடம் மற்றும் அனுமதி உரிமங்கள் என்பனப்பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபாடும். அவ்வாறே அதன் அனுமதி உரிம கட்டணங்களும் பெருவாரியான நகரங்களில் அதிகமாகவும், பின்தங்கிய பிரதேசங்களில் குறைவானதாகவும் காணப்படும் என்பதால் தொழில் தொடங்கும் பிரதேசம் தொடர்பில் கவனம் எடுப்பது சிறந்தது.

2. மூலப்பொருட்கள்
உங்கள் முயற்சிக்கு தேவையான மூலப்பொருட்கள் எவை என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது மிகவும் அத்தியாவசியமானது. கணினி, வரைகலை உபகரணங்கள் , மின்னியல் பொருட்கள் என்னென்ன மற்றும் எந்த அளவிலானது போன்ற திட்டமிடலை முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னமே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

3. வேலைத்தளம்

தேர்ந்தெடுக்கும் அலுவலக இடம் மற்றும் அதற்கான பிரதேசம் என்பன தொலைவானதாகவும் மிகவும் நமது தேவையிலும் பார்க்க பெரியதாகவும் இல்லாமல் இருப்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் . அவ்வாறே அந்த இடங்கள் அமைந்துள்ள சூழ்நிலை நமது தொழில் முயற்சிக்கு ஏதுவானது என்பதனையும் மறக்காமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

4. சங்கங்க மற்றும் சந்தாக்கள் 

நமது முயற்சி தொடர்பான சங்கங்கள் அல்லது திணைக்களங்கள் என்பனவற்றில் பதியவோ அல்லது நமது முயற்சி தொடர்பான அறிவுரைகளை பெறவேண்டி வரும் எனில் அவ்வாறான இடங்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்க தவறாதீர்கள் . 

5. இயக்குவதற்கான செலவீடுகள் 

தொழில் முயற்சியை தொடர்ந்து நடத்தவும், நீண்டகாலம் தொடர்ந்தும் கொண்டு செல்லவுமான செலவீடுகள் என்னென்ன என்பது தொடர்பில் முற்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும், சந்தைப்படுத்தல், விளம்பரம் மற்றும் ஏனைய இதர செலவீடுகளை திட்டமிடல் அவசியம் 

6. சட்ட வரையறைகளும் ஆலோசனைகளும்.

எல்லா தொழிற்துறைக்குமான பொதுவான சட்ட வரையறைகள் எவை என்பது தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.அவ்வாறே தொழில் முயற்சி ஆரம்பிப்பதற்கு பதிவுசெய்தல் மற்றும் சட்ட ரீதியான கட்டணங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளுவது முக்கியம் வாய்ந்தது ஆகும்.

7. மனிதவளம் 

எம்முடன் தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் மனிதவளங்கள் மற்றும் வேலையாட்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட சக தொழில் முனைவோர் தொடர்பில் புரிதல் அவசியம், வினைத்திறனான தொழிலாளர்களை தேர்வுசெய்வது தொடங்கி 
எவ்வாறாயினும் தொழில் முயற்சிகளுக்கான முதலீட்டின் போது அளவை கட்டுப்படுத்துவதற்கு பிரதானமாக காணப்படும் இரண்டு யுக்திகளில் ஒன்று செலவை குறைப்பது, மற்றையது மூலதனத்திற்கான பிற வழிகளை கண்டறிவது. இவ்விரண்டையும் சரியான முறையில் பிரயோகித்தோமானால் சிலசமயங்களில் முதலீடே இல்லாமல் கூட முயற்சியினை ஆரம்பித்துவிடலாம்.

மேலும் பின்வரும் யுக்திகள் மூலம் முதலில் அளவினை குறைத்துக்கொள்ளலாம் 

தேவைகளை குறைத்துக்கொள்வது 

உங்களின் நிறுவன மாதிரியை கருத்திற்கொண்டு அவற்றிற்கான செலவினங்களை கட்டுப்படுத்திடுவது ஆகும். உதாரணமாக சக ஊழியர்களை தெரிவுசெய்யும்போது பகுதிநேர வேலையாட்களை தெரிவுசெய்வது அல்லது கட்டற்ற தொழில் சேவகர்களை (FREELANCE) தொழிலுக்கு அமர்த்துவதன் மூலம் மனிதவலத்திற்கென நாம் செலவிடவுள்ள தொகையின் அளவு கணிசமான அளவு குறைக்கப்படும்.எவ்வாறாயினும் கண்டிப்பாக செலவிடவேண்டிய விடையங்கள் என ஒருசில தேவைகள் கண்டிப்பாக அமைந்துவிடுகின்றன. அவற்றிநை வகைப்படுத்தி செய்யப்படும் செலவுகளில் எது முதன்மையானது மற்றும் முக்கியமானது என வகையறிந்து செலவுகளை மேற்கொள்ளும்போது சேமிப்பானது பாதுகாக்கப்படும்.

சரியான காலத்தை தேர்ந்தெடுப்பது.

தொழில் முயற்சியை ஆரம்பிக்கும் முன்னர் அந்த தொழிலுக்கு ஏதுவான காலத்தினை கண்டறிந்து கொள்வது நல்லது. நமது வியாபாரமாகட்டும் எதுவகையான தொழில் முயற்சிகளாகட்டும் அதற்கான ஏதுவான காலம் என்பது எதுவென கண்டறிந்து அந்த காலத்தின் போது முயற்சிகளை ஆரம்பித்தோமானால் நாம் வெற்றிபெறுவது நிச்சயம் .

வெளி உதவிகள் 

தமது சொந்த முதலீடுகள் முயற்சிகள் தவிர்த்து வியாபார முயற்சிகளுக்கு சில வெளிக்களஉதவிகளின் மூலம் முதலீட்டினை பெற்றுக்கொள்வது என்பது சிறந்ததொரு வழிவகை ஆகும்.அவ்வகை வெளிவாரி உதவிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய யுக்திகள் இவை தான் 

  • நண்பர்கள் மற்றும் வெளி நபர்களின் மூலமான உதவிகளை கொண்டு பணமாகவோ அல்லது உழைப்பாகவோ உதவிகளை பெறலாம். 
  • ஏஞ்சல் இன்வெஸ்ட்டர்ஸ் என்று அழைக்கப்படும் முதலீட்டு முன்னணியாளர்களின் உதவிகளை பெறுவதன் மூலம் முதலீட்டின் சுமை குறைக்கப்படும். அதாவது நமது முயற்சியாண்மையை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ அவரது பொறுப்பின் கீழான முதலீட்டின் மூலம் தொழிலை முன்கொண்டு செல்வது இதனை குறிக்கும்.
  • முயற்சியாண்மை முதலீட்டாளர்கள் மூலம் நமது தொழில் முயற்சிகளுக்கு முதலீடுகளை மேற்கொள்ள வைக்கலாம் , இவர்களை துணிகர முதலீட்டாளர்கள் எனவும் அழைப்பர். இவ்வகை முதலீட்டாளர்கள் பொதுவாக முடங்கிய தொழில் முயற்சிகளுக்கு முதலீடு செய்வது தொடர்பில் அக்கறை செலுத்துவர். இதற்கான காரணம் தமது முதலீட்டின் ஒரு பகுதியை அல்லது முழுவதும் தாம் உரிமை கோருவதற்காகவும் இவ்வகை முதலீட்டாளர்கள் முன்வருவதும் உண்டு.
  • கூட்டு முதலீடு ஒரு சிறந்த யுக்தி. பலரிடமிருந்து சிறு சிறு தொகைகளாக முதலீயீட்டினை பெற்றுக்கொள்வதன்மூலம் தொழில் முயற்சிக்கான பேரளவு பணபற்றாக்குறை குறைக்கப்படும்.
  • சில தொழில் முயற்சிகளுக்கான சிறப்பு அரச மானியங்களும், கடன்களும் பெற்றுக்கொடுக்கப்படுவது முதலீட்டின் சுமைகளை பேரளவில் குறைக்கக்கூடிய ஒரு சிறந்த யுக்தி ஆகும். 
  • வங்கிக்கடன்களை பெற்றுக்கொள்வதன் மூலம் தொழில் முயற்சியினை முதலீட்டு சுமையினை குறைத்துக்கொண்டு முன் கொண்டு செல்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் யுக்தி ஒன்றாகும்.
Article By TamilFeed Media, Canada
3639 Visits

Share this article with your friends.

More Suggestions | Business