அலுவலக தொடர்பாடல்களில் நீங்கள் பயன்படுத்த கூடாத வார்த்தைகள்

திறன்மிக்க தொடர்பாடல் முறைறைமையினை வளர்த்துக்கொள்ள தவிர்க்க வேண்டிய சொற்பிரயோகங்கள்.
அலுவலக தொடர்பாடல்களில் நீங்கள் பயன்படுத்த கூடாத வார்த்தைகள்

மனிதன் பொது வெளியில் தம்மை வெளிப்படுத்தும் போதே அவனுக்குள் தொடர்பாடல் திறனும் வளரத்தொடங்குகின்றது. தொடர்பாடல் திறன் என்பது சாதாரணமாக இரண்டு நபர்கள் பேசும்போது மட்டுமல்ல, பலர் முன்னிலையில் தாம் வெளிப்படுத்தும் அனைத்து விடயங்களையும் எவ்வாறு முன்வைப்பது என்பதில் தான் சிறந்த தொடர்பாடல் திறன் தங்கியுள்ளது.

தொழில் நிலை என்று வரும்பொழுது அவனது தொடர்பாடல் தகமையானது கண்டிப்பாக மேம்படுத்தப்பட்டதாகவே இருக்க வேண்டியது அவசியம் ஆகின்றது. இதற்கான காரணம் நாம் தொழில் நிலையினை அடையும்பொழுது பல்வேறுபட்ட நபர்களுடனும், பல்வேறு நிலைகளையுடைய நபர்களுடனும் கண்டிப்பாக பணியாற்ற வேண்டி இருப்பதனால் ஆகும். எனவே சாதாரண நிலையில் நாம் மேற்கொள்ளும் தொடர்பாடல் முறைமைகள் தொழில்நிலை என்று வரும்பொழுது கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகின்றது.

இவ்வாறு தொடர்பாடல் நிலைகளை மேம்படுத்திக்கொள்வது தொழில் நிலை நபர்களுக்கு மட்டுமல்ல , சாதாரண தனிநபராக போதும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை உன்னார்ந்துகொள்ள வேண்டும் .

நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அதுவே இந்த உலகம் நம்மை எவ்வாறு கணிப்பிடுகின்றது என்பதற்கான வெளிப்படுத்தல் கருவி ஆகும். ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவல் பரிமாற்றத்திற்கு அனைவரும் கண்டிப்பாக தமது கவனத்தினை காட்டுவது அனுமானிக்க கூடியதாகும். குறிப்பாக செய்திகள் மற்றும் தகவல் தொடர்பாடல்களில் நீங்கள் காணும்பொழுது அரசியல் பிரச்சாரங்கள், மற்றும் தகவல் பரிமாற்றல்களுக்கே அதிக நேரத்தினை செலவிடுவதை அவதானிக்கலாம். இதற்கான காரணம் தொடர்பாடல் என்பது மிகவும் சக்திவாய்ந்தது என்பதனால் ஆகும்.

எமது குறிக்கோள்களுடன் முன்னோக்கி நகருவதற்கு உதவும் வலுவான வார்த்தைகளை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்வது முக்கியம், ஆனால் நம்மில் பெரும்பாலோர் எங்களது வார்த்தை தேர்வுகள் மூலம் தம்மைத்தாமே பாழாக்கி கொள்வதனை அவதானிக்க கூடியதாகவே உள்ளது. 

பெரும்பாலான நபர்களை நாம் காணும்போது அவர்கள் நன்குபடித்த, புறத்தோற்றத்தில் சிறந்தவர்களாக தென்படலாம் ஆனால் அவர்களிடம் இருக்கும் தொடர்பாடல் திறமின்மை அல்லது வார்த்தைகளை பிரயோகிக்க தெரியாமை என்ற குறைபாட்டின் காரணமாக பல இடங்களிலும் அவர்கள் பின் தள்ளப்பட்டு இருப்பதனை அறியலாம்.

வாய்திறமை என்பது பலருக்குமான வரப்பிரசாதமாகவே கருதப்படுகின்றது. என்னதான் சிறந்த படைப்பாற்றல் மிகுந்த நபராக இருந்தாலும் உங்களுக்கு பேச்சுத்திறன் இல்லாமல் போனால் உங்கள் திறன் வெளிகொண்டுவரப்படுவது இல்லை. தொழில்ரீதியில் பேச்சுதிறமையும் தொடர்பாடல் திறனும் அடிப்படை முக்கியத்துவம் பெறுகின்றது என்பதனால் அதனை எவ்வாறு வளர்த்துக்கொண்டு முன்னேறலாம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அந்த வகையில் தொழில்ரீதியில் நீங்கள் பயன்படுத்த கூடாத சில சொற்பிரயோகங்கள் எவை என பார்க்கலாம்.

 

1. "உண்மை எதுவென்றால்" - "Actually"...

பலரின் தொழில்சார் உரையாடல்களில் அவதானிக்கும் ஒரு வார்த்தை "Actually" என்பது ஆகும். இதனை ஒரு நவீனத்துவ சிலேடையாக பலர் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும் இது தொழில்முறைக்கு ஒவ்வாத வார்த்தை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் "உண்மையில்" என்று ஆரம்பிக்கும் உங்கள் உரையாடல் அந்த இடத்தில் ஏதேனும் போலியான விடயத்தினை மறைமுகமாக முன் நிறுத்துவதனை உங்களால் உணரக்கூடியதாக இருக்கும். எனவே தொழில்முறை Professional தகவல் பரிமாற்றலின் போது இந்த வார்த்தையினை பயன்படுத்த வேண்டாம். 

2. "ஆனால்" - "But" 

ஆனால் என்ற வார்த்தையினை உங்களின் கருத்தாடலில் பயன்படுத்தும்போது அதற்கு முன்னதாக நீங்கள் கூறும் அனைத்து விடயங்களையும் மறக்க செய்வதற்கு வழிவகுக்கும். உதாரணமாக "நான் இதை எவ்வாறு செய்தேன் என்பதை கூறுகிறேன், ஆனால் .." என நீங்கள் குறிப்பிடும்பொழுது உங்களை செவிமடுப்பவரின் கவனம் திசை திருப்பப்படும். அவ்வாறு இல்லாமல் அவ்விடத்தில் "மற்றும்" என்ற சொல்லினை பயன்படுத்தும்போது உங்களை செவிமடுக்க மேலும் அவர்களை தூண்டும் வகையில் இருக்கும். எனவே வார்த்தைகள் பிரயோகிப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமே ஆகும்.

3. "நினைக்கிறேன்" - "Assume" 

தொழில் ரீதியில் தவிர்க்கப்படவேண்டிய பிரதான விடயம் அனுமானம் (Assuming). இது உங்களின் தெளிவற்ற தன்மையினை வெளிப்படையாக பிறருக்கு எடுத்துகாட்டிவிடும். அதனால் உங்கள் மீதான நம்பிக்கை குறைவடையவும் அதிக வாய்ப்புக்கள் உண்டு. இதனை வார்த்தைகளால் பிரயோகிக்கும்போதும் கூட "நான் நினைத்தேன்" என நீங்கள் குறிப்பிடும்பொழுது உங்களின் ஸ்திரமற்ற தன்மையினை காட்டிவிடுகிறது. நிலையில்லா போக்குடையவர் என்று உங்கள் மீதான நன்மதிப்பை இழக்க வைக்கும் இந்த சொற்பதத்தினை தவிர்த்தே விடுங்கள். 

4. "குழப்பம்" - "Disrupt".

குழப்பநிலை கூட உங்களின் உண்மை நிலைப்பாட்டினை மாற்றியே இந்த உலகத்திற்கு காட்டும் நீங்கள் குழம்பிய மனநிலையில் இருந்தாலோ அல்லது உங்கள் வார்த்தைகளில��� குழப்பம் இருந்தாலோ உங்களை செவிமடுப்பவருக்கு நீங்களே ஒரு அதிருப்தி நிலையினை உருவாக்கி கொடுப்பதனை உணரமுடியும். அத்ததுடன் உங்களுக்கு இருக்கும் குழப்ப நிலையினை கூட உங்கள் உரையாடலில் பிரயோகிக்க வேண்டாம். அது உங்களின் உண்மை தோற்றத்தினை கூட வேறுவிதமாக பிரதிபலித்துவிடும் என்பதனை மறந்துவிட வேண்டாம்.

5. "டியூட்" - "Dude". 

தொழிசார் தகமையினை வளர்க்கும் விதமாக நீங்கள் பிறருடன் உரையாடும் பொழுது நண்பர்களை சாதாரணமாக அழைக்கும் சொற்பதங்களை கூப்பிட்டு அழைப்பதை தவிர்த்தே ஆகவேண்டும். பலரும் நினைப்பது உண்டு இவ்வாறு நட்பு ரீதியில் நண்பனை போல நம்முடன் பழகும் தொழில் சகபாடிகளை அழைப்பது நெருக்கத்தினை உருவாகும் என்று. ஆனால், அந்த முறை முற்றிலும் தவறானது. தொழிசார் ரீதியில் பிற தொழில்முறை அனுபவம், போன்ற பல்வேறு விடயங்களில் கூட உங்களை விட பெரியவராக அல்லது சிறியவராகவோ இருக்கலாம். அவரை அழைக்கும்போது நீங்கள் உங்களை நட்பு வட்டாரத்தினருடன் பேசுவதை போன்று மச்சான், போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் உங்களை தரக்குறைவாக நினைக்க வாய்ப்புக்கள் அதிகம். முடிந்தளவில் அவர்களது பெயரை குறிப்பிட்டு அழைப்பதே தொழில்முறைமை வழி ஆகும் என்பதனை மறந்துவிட வேண்டாம்.

 

Article By TamilFeed Media, Canada
10501 Visits

Share this article with your friends.

More Suggestions | Business