உங்கள் வெற்றியினை தடுப்பது நீங்களே.

தொழில்துறையில் உங்கள் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 3 காரணிகள் இவைதான்.

எந்தவொரு முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்ட உடனே நம்மால் முன்வைக்கப்படும் காரணிகளில் ஒன்று துரதிஷ்டமும், மற்றயது புறசூழல் காரணிகளும் ஆகும்.மாறாக அந்த தோல்வி நிலைக்கு தம்மை தாமே பொறுப்பேற்றுக்கொள்ளும் பக்குவநிலையோ அல்லது மனப்பாங்கோ மனிதரிடையே இல்லாததொரு நிலைப்பாடு உள்ளது.

சொந்த நிர்வாக திறமையில் உள்ள குறைகள், முடிவெடுக்கும் திறனில் உள்ள ஐயப்பாடு, போன்ற அகச்சூழல் காரணிகளை நமது தோல்விக்கான காரணிகளாக யாரும் முன்வைப்பது இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. 

உண்மையில் ஒவ்வொரு முயற்சியாளரும் தாமாகவே கடைபிடித்துக்கொள்ளவேண்டியதும் தாண்டி வரவேண்டியதுமான தடைகளை இனம் காணலாம்.

1. தவிர்க்க முடியாத சில காரணிகள் 

கட்டுகோப்புடைய வணிக முயற்சியாகட்டும், அல்லது சீரற்ற தொடக்க நிலையுடைய வணிகமாகட்டும் , அல்லது தொடர் தோல்விகளை எதிர் நோக்கிய வணிக நிலையினை நீங்கள் தொடர்ந்து செல்ல நிர்பந்திக்கப்பட்டதாவே இருக்கட்டும், செயலற்ற விடயங்களை நீங்கள் எத்துணை முயற்சிகள் எடுத்தும் உங்களால் தொடர்ந்தும் செயற்திறனுடையதாக முன் கொண்டு செல்வது முடியாமலேயே போய்விடலாம். இவ்வகை சந்தர்ப்பங்களில் மிக நீண்டகால யோசனைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவிட முடியா நிலையும் உங்களுக்கு ஏற்படும்.

தோல்வி நிலையினை ஏற்றுக்கொள்ளாமல் விட்டு செல்வதால் அது வெவ்வேறு வழிகளில் உங்களை பின் தொடரும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு ஒவ்வொருவருக்கும் வர வேண்டியது அவசியமானது ஆகும். உங்களின் தற்பெருமை மற்றும் பிடிவாத குணத்தினை தொடர அனுமதிக்க வேண்டாம் அதுவே தோல்விகள் உங்களைபின்தொடர்ந்திட ஏதுவான காரணிகள் ஆகும்.

முந்தைய அனுபவங்களில் இருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்தும் நீங்கள் வெற்றியை அடைந்து கொள்ள வழிவகைகளை தேடி கொள்வதை மறுதலிக்க வேண்டாம் .

2. உங்கள் மீதான உங்களின் சந்தேகங்கள். 

ஒவ்வொரு தனிமனிதருக்கு அவருக்கான தனிப்பட்ட திறமை என்பது உள்ளகத்தே உள்ளது என்பது அடிப்படை விதி ஆகும். அவர்களின் தனித்திறமையின் போது அவர்களுக்கே ஏற்படும் சந்தேக தன்மை ஒவ்வொருவரின் தோல்விநிலைக்கு விதையாக அமைந்து விடுகின்றது என்பதை நீங்களே அறிவீர்களா?

நம்பிக்கையின்மை என்பது சுய அழிவைத் தீர்மானிக்கும் தீர்க்க தரிசன காரணி ஆகும். நீங்கள் உங்களின் மீது வைக்கும் சுய நம்பிக்கை என்பதே உங்கள் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் 

3. இல்லை என்பதை சொல்ல தெரிவதில்லை. 

நீங்கள் பிறருக்கு உதவ முற்படும் வேளையில் நீங்களாகவே வருத்தமான நிலையை தேடிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும். உதவி நிலை என்று வரும்போது "ஆம்" என்று சொல்லுபவரை விட "இல்லை" என்று கூறுபவரின் நேரமும், பணமும் மிச்சப்படுத்தப்படுவதாக அறியப்படுகின்றது.

இதற்கான காரணம் யாதெனில் உங்களின் சொந்த தேவைகளுக்கான நேரத்தினை ஒதுக்கி கொள்வதில் நீங்கள் இன்னமும் சிரத்தையுடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பிறருக்கு உதவுவது தப்பில்லை, எனினும் தத்தமது முன்னேற்ற நிலையை சீர் செய்த பின் பிறருக்கு உதவி செய்வதே விரும்பத்தக்கது ஆகும்.

"உதவி வரைத்தன்று , உதவி செய்யப்பட்டார் சார்பில் வரைத்து" என்கிறது திருக்குறள். செய்யப்படும் உதவியானது விழலுக்கு இறைத்த நீராக பல சமயங்களில் போய்விடுவதே உங்கள் தோல்விக்கான அடிப்படை காரணிகளில் ஒன்றாகும். இதனால் நீங்கள் பிறருக்கு உதவி செய்வதை போல் அவரிடம் இருந்து உதவிகளை எதிர்பார்ப்பதை வழமையாக கொண்டிருப்பீர்கள். அது சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்காமல் போய்விடின் அது உங்களை தோல்வியுற செய்யும்.

எனவே இடமறிந்து "இல்லை" என்ற வார்த்தையினை பிரயோகித்து உங்கள் பணத்தையும் , நேரத்தையும் மீதப்படுத்தி கொள்வதில் கரிசனை காட்டினாள் உங்கள் தோல்வி என்ற தடையை நீங்கள் எளிதாக கடந்து விடலாம்.

Article By TamilFeed Media, Canada
2365 Visits

Share this article with your friends.

More Suggestions | Business