ஆரம்பநிலை வணிக முயற்சிகள் விடும் பெரிய தவறுகள் இவைதான்

சந்தைப்படுத்தல் தொடர்பில் தொடக்கநிலை வியாபாரங்கள் விடக்கூடிய தவறுகள் இவைதான் 
ஆரம்பநிலை வணிக முயற்சிகள் விடும் பெரிய தவறுகள் இவைதான்

நீங்கள் எவ்வகையான தொழிலையும் ஆரம்பிக்கலாம், எந்த நிலையிலும் ஆரம்பிக்கலாம். ஆனால் எதுவித தவறுகளும் ஏற்படாமல் புதிய தொழில்களை தொடங்கவோ அல்லது தொடர்ந்தும் நடத்தி செல்லவோ முடிவதில்லை 

குறிப்பாக தொடக்க நிலை தொழில்கள் என்றபொழுது சில அடிப்படை விடயங்களை கண்டிப்பாக கருதுவது அவசியம். ஆரம்பநிலை சந்தைப்படுத்தல் சவால்கள் தொடர்பான அறிவு, கட்டமைக்கப்பட்ட வரவு செலவு திட்டங்கள், மற்றும் தொழிலின் வர்தக்கக்குறி, மற்றும் பெயர் தொடர்பான விழிப்புணர்வையும் அறிவாற்றலையும் ஏற்படுத்துதல் போன்றவற்றை கட்டாயமாக கடைபிடித்துக்கொள்ள அழுத்தம் கொடுப்பது முக்கியத்துவம் ஆகின்றது 

தொடக்கநிலை வணிகத்தின் சந்தைப்படுத்தல் தொடர்பில் எங்கே எப்படி, எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து நீங்கள் தெளிந்து வைத்திருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொடக்கநிலை வணிகங்களின்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தைப்படுத்தல் தவறுகள் எவை என்பதையும், அவற்றினை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதனையும் இங்கு காணலாம்.

விரைவாக பணம் ஈட்டும் நோக்கில் அதிகமாக செலவழிப்பது 

எந்தவொரு தொழிலிலும் விரைவானதும் அதிக இலாபகரமானதுமான விளைவுகளையே அனைவரும் எதிர்பார்ப்பார்கள். இதற்கென பெரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டும் இருப்பார்கள். இதுவே ஒவ்வொரு ஆரம்ப நிலையிலும் அனைவரும் விடக்கூடிய பாரிய தவறு ஆகும். தொடங்கியவுடனேயே இலாபத்தினை பெரியளவில் எதிர்பார்ப்பதுவும், விரைவாக எதிர்பார்ப்பதுவும் மனித இயல்பு. ஆயினும், அதற்காக வீணாக பாரிய முதலீடுகளை மேற்கொள்வதுவும் முட்டாள்தனம். எனவே முதலீட்டின் அளவினை மட்டுப்படுத்துவதன் மூலம் பாரிய நட்டங்களில் இருந்து தொடக்கநிலையின் போதே வணிக முயற்சிகளை பாதுகாத்துக்கொள்ள முடியும் 

தவறான ஊடக அணுகுமுறை 

அனைத்திற்கும் முதலில் உங்களின் இலக்கு வாடிக்கையாளர்கள் யார் என்பதனை அறிந்து கொள்ளாமல் அனைத்து தரப்பினருக்கும் உங்களின் சந்தைப்படுத்தல் முறைமையினை வெளிப்படுத்துவது அடுத்தபடியான தவறு ஆகும். உதாரணமாக நீங்கள் இளம் பெண்கள் சார்பான பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியாளர் என்றால் உங்களின் சந்தைப்படுத்தல் வெளிப்படுத்தல்கள் மற்றும் யுக்திகளை இளம் இளைஞர் மற்றும் யுவதிகளை மட்டும் சார்ந்ததாக செய்யவேண்டும் இது உங்களுக்கான நட்ட விளைவுகளை கட்டுப்படுத்தும் 

சந்தைப்படுத்தலை விரைவுபடுத்த ஊழியர்களுக்குக்கொடுக்கும் அழுத்தம்.

சந்தைப்படுத்தல் என்பது விற்பனைக்கான சிறந்த யுக்தி ஆகும். என்றாலும் அவற்றை விளைதிறனுடன் செய்யும் ஊழியவளங்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதானது. அவ்வாறு கிடைக்கும் உயர் திறன்மிக்க சந்தைப்படுத்தல் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்கென அதிக செலவுகளையும் முதலீடுகளையும் செய்வதன் மூலம் உங்கள் வர்த்தகக்குறியானது சிறந்த விரிவாக்கம் நிலையினை அடையும் என்பதனை நீங்கள் நினைப்பதும் உண்டு. ஆனால் இது தவறான செயன்முறையை ஆகும்.

முழுநேர சந்தைப்படுத்தல் வல்லுநர்களை நாம் அதிக செலவில் பணிக்கு அமர்த்துவதிலும் பார்க்க பகுதிநேர, கட்டுப்பாடற்ற, சுயாதீன முகவர்கள் மற்றும் தனிப்பட்டோர் ஆகியோர் மூலமான சந்தைப்படுத்தல் முறைமை என்பது வியாபாரக்குறி மற்றும் தொழிற்ச்சந்தை போன்றவற்றை எமது வாடிக்கையாளர்களிடம் இலகுவாகவும் குறைந்த பொருட்செலவிலும் நேரடியாகவும் க்கொண்டு சேர்க்கலாம் என்பதில் மறுப்பில்லை 

வர்த்தக குறியினை பிரபலப்படுத்த அதிகநேரம் செலவிடுதல் 

எந்தவொரு புதிய குறியீடும் வாடிக்கையாளரின் மனதில் இடம்பெற வேண்டும் என்றாலும் பிரபல்யமாக வேண்டும் என்றாலும் சில நாட்கள் செல்லும் என்பது வர்த்தகத்தின் எழுதப்படாத விதி. ஆயினும் அவ்வகையான நாமகரணங்களை பிரபல்யப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் இடையில் குறியீட்டினை நிலைபெற செய்வதற்கும் அதிக காலம் எடுத்தல் என்பது தவறான செயல் ஆகும். இவ்வாறு உங்கள் பொருட்கள் அல்லது சேவையின் வியாபாரக்குறியானது வாடிக்கையாளர்களிடம் சென்றடைய காலம் எடுக்கும் என்றால் அது தவறான அணுகுமுறையினை கொண்டுள்ளதாக அறிந்துகொள்ளுங்கள்.

பிரபல்யப்படுத்துவதற்கென இலகுவானதும், குறுகியதுமான வினைத்திறனான யுக்திகளை பயன்படுத்துவது அவசியம் ஆகும். உங்களின் விற்பனை குறி மக்களை சென்றடைய நீண்டகாலம் எடுக்கும் என்றால் பொருள் தொடர்பான விற்பனை எவ்வாறு அதிகரிக்கும்?

அனைத்து முயற்சிகளுக்கான முடிவுகளை பொதுப்படையாக்குதல்.

ஆரம்பநிலையில் மனிதவளம், தொழில்வளம், மற்றும் வியாபார திறம் போன்ற விடயங்கள்அனைத்து தொடக்கநிலை வணிகத்திலும் குறைந்த அளவிலேயே காணப்படும் . இதன்போது ஒவ்வொரு சிறு சிறு துறைகளுக்குமான அனைத்து விடயங்களையும் அனைத்து தரப்பினருடன்ஆலோசனை செய்யலாம். ஆனால் இறுதி தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் அனைவரினதும் கருத்துக்களை பெற்றாலும் அனைவருக்கும் முடிவு செய்யும் தகமையினை வழங்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

எத்தனை ஆலோசனைகள், முடிவுகள் எட்டப்பட்டாலும் இறுதி தீர்மானம் என்பது நிர்வாக தலைமையிடம் மட்டுமே இருத்தல் வேண்டும். பல்வேறு துறையினரும் அவரவர்களுக்கான துறை சார் முடிவுகளை பரிந்துரைப்பார்கள். அ��ை ஒன்றுக்கு ஒன்று முரணானவை. இதனால் குறிப்பிட்ட துறை தவிர ஏனைய துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தீர்வினை எடுக்கும் விடயத்தினை நிர்வாக தலைமைகளிடம் மட்டுமே கொடுக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகின்றது.
 

Article By TamilFeed Media, Canada
2037 Visits

Share this article with your friends.

More Suggestions | Business