வெண்டைக்காய் வெப்பத்தை அகற்றி குளிர்மையைத் தரும்.

வெண்டைக்காயினை சமைத்து உண்பதிலும் பார்க்க பச்சையாக உண்ணும் போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களோ அதிகம் இதனால் வெண்டைக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயில் அதிகமாக பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துகள், மற்றும் மாச் சத்துக்கள் உள்ளன. இவை எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த கலோரிகள் ஆகும். இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் இதில் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு அதிக கலோரி கிடைக்கிறது.

வெண்டைக்காயை வெட்டும்போது வழுவல் தன்மை கொண்ட பிசுபிசுவென ஒரு திரவம் வெளிவருவதை பார்த்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கு இதத்தையும் கொடுத்து அதன் சத்தை முழுமையாக பெறமுடியும்.

வெண்டைக்காயில் மட்டுமல்லாது அதன் இலை, விதை, வேர் ஆகியவற்றிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றுகிறது.

பிஞ்சுகளை சிறு துண்டுகளாக வெட்டி மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.

இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து குடித்தால், இருமல், மற்றும் நீர்க்கடுப்பு போன்ற நோய்கள் குணமாகும்.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கி, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை கொடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி சாப்பிட கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும்.

Article By TamilFeed Media, Canada
4210 Visits

Share this article with your friends.

More Suggestions | Health