"TIRED AT ALL TIME " என்பதனை அண்மையில் வெகுவாக கேள்விப்பட்டுள்ளோம். பேரளவிலான வலி, நோய்கள், வருத்தங்கள் இல்லாத போதும் எமது உடல்நிலையானது எப்போதுமே களைப்பாகவும், சோர்வுத்தன்மையுடையதாகவும் காணப்படுவதனை TIRED AT ALL TIME குறிப்பிடுகின்றது.
தொடர்ந்தும் உங்களுக்கு இவ்வாறு சோர்வுநிலை உணரப்படுமாயின் உங்கள் சீரான உடல் செயற்பாட்டில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதை அறிந்திடுங்கள்.
உடல் ரீதியானதும், மனரீதியானதும் உபாதைகளின் பக்கவிளைவாக சோர்வுநிலை உணரப்படுகின்றது. அவ்வாறே வலிகள், உடல் உபாதைகள், மூட்டு இணைப்புக்களின் வலிகள், மன அழுத்தம், பசி, குழப்பநிலை போன்ற பல்வேறுபட்ட காரணிகளுக்காகவும் சோர்வு நிலை ஏற்படும்.
சோர்வு நிலையின் போது இழந்த உங்களின் வலிமையை மீளப்பெறுதல் என்பது இலகுவானது ஆகும். சோர்வு ஏற்படுவதற்கான சில காரணிகளை இனம்காணுவதன் மூலம் அவற்றில் இருந்து நீங்கள் மீளும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு சோர்வுநிலை உணரப்பட முக்கிய காரணிகளை இங்கு காணலாம்.
- குறைவான உறக்கம்.(Poor Sleep)
ஆண், பெண் இரு பாலாருக்கும் களைப்பு நிலை ஏற்பட முக்கிய காரணிகளில் குறைநிலை உறக்கம், அல்லது தூக்கமின்மை (INSOMNIA) முதன்மையானது ஆகும். இரவில் நீங்கள் சரியாக உறங்கிடாது போனால் அடுத்த நாள் உங்களின் உடல் நிலை சோர்வாகவே காணப்படுவதனை உணர்வீர்கள்.
ஒருவரின் தூக்கத்தின் அளவு என்பது மனிதர்களின் வயது வரம்பிற்கு ஏற்றது படி மாறுபடும் தன்மையை கொண்டது. இது குழந்தைகளுக்கு 16மணித்தியாலங்களை, இளம்பராயத்தினருக்கு 9மணித்தியாலங்களுக்கு, வயது வந்தோருக்கு 6மணித்தியாளமாக வரையரை செய்யப்பட்டு உள்ளது. எனவே உறக்கத்தின் அளவு மாறுபடும் பட்சத்தில் உடலின் சோர்வுநிலை அதிகரிக்கப்படும்.
- இரத்தசோகை.(Anemia).
இது பெண்களுக்கு அதிக உடல் சோர்வு தென்படுவதற்கான முக்கிய காரணி ஆகும். உடலில் உள்ள சிகப்பணுக்கள் உற்பத்தி குறைவடையும் பட்சத்தில் திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்சிஜன் கடத்தப்படும். இதனை குருதிப்பரிசோதனை மூலம் இனம்காணலாம்.
உங்களின் உடலுக்கு விட்டமின் B12 அதிகளவில் தேவைப்படுகின்றது. இது உடலில் உள்ள நியூரோன்களை ஒழுங்காக செயல்படுத்தவும், சிகப்பணுக்கள் உற்பத்தியை தூண்டுவதாகவும் இருக்கின்றது.
இவ்வகை விட்டமின் B12 சத்தானது பொதுவாக மாமிச உணவுகளின் மூலமே பெறப்படுகின்றது. எனவே பெண்கள் அதிகளவில் மாமிச உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
- குறைநிலை உணவுப்பழக்கம் (Poor Eating Habits)
இக்காலத்தின் பலர் உடல் நிறை அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்தில் உணவு உட்கொள்ளும் அளவினை கட்டுப்படுத்தி வருகின்றனர். இது முற்றிலும் தவறான நிலை ஆகும். குறைவாக உணவு உட்கொள்வது அல்லது உணவுகளை உட்கொள்ளாமல் விடுவதோ உடலின் எடையில் தாக்கத்தினை ஏற்படுத்தாது. மாறாக உடல் சோர்வு நிலையை ஏற்படுத்தும்.
உடலில் எடையை குறைக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு நீங்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபடுதலானது உங்களின் குருதியில் உள்ள சர்க்கரை அளவினை அதிகப்படுத்தி விடும்.
தினமும் காலை உணவினை புரதம், காபோஹைதரேட் நிறைந்த வலிமைமிக்க உணவாக உட்கொள்வது அனைவருக்கும் அவசியமானது ஆகும்.
- தைரொயிட் குறைபாடு (Thyroid problem).
உங்களின் கழுத்து பகுதியில் காணப்படும் தைரொயிட் சுரப்பியானது உங்களின் வளர்ச்சிதையை கட்டுப்படுத்தும் காரணியாகின்றது. உடலுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை விரைவாக உடலின் வலிமை சக்தியாக மாற்றிட இவை உதவுகின்றது.
தைரொயிட் சுரப்புக்களின் சுரப்பி குறைவடையும் பட்சத்தில் உடலின் வளர்ச்சிதை இயக்கத்தின் அளவு குறைவடையும். இதனால் உடல் நிறை அதிகரிப்பது உணரப்படும். இதனால் உடல்நிலையானது சோர்வாகவே காணப்படும். எனவே தைரொயிட் தொடர்பான குருதி பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது.
- நாட்பட்ட சோர்வு நிலை (Chronic fatigue syndrome)
நாட்பட்ட சோர்வுநிலை மருத்துவ சொற்பதத்தில் myalgic encephalomyelitis என்றும் கூறப்படும். இது ஆறுமாத காலத்ததிற்கு முடக்குவாதம் சோர்வு போன்ற உபாதைகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் அடிக்கடி தசைவலி, தலைவலி, போன்ற அறிகுறிகள் அடிக்கடி வெளிப்படுத்தப்படும்.
- சிறுநீரக பாதிப்பு (Urinary tract infection).
அடிக்கடி சிறுநீர் கழிப்பது , சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பு, சிறுநீர் தொற்று என்பனவற்றால் அடிக்கடி சோர்வுநிலை உணரப்படுவதனை கருத்தில் கொள்வது அவசியம். எனவே கண்டிப்பாக சிறுநீராக பரிசோதனையுடனான வைத்திய ஆலோசனை என்பது கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.