இஞ்சியின் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா?

இஞ்சி டீ அருந்துங்கள்

தினசரி உயர்வை சிந்தி உழைக்கும் மனிதனுக்கும் சரி, மூளையை கசக்கி பிழிந்து வேளை செய்யும் மனிதனுக்கும் சரி, அற்புத மருந்து இஞ்சி என்று சொல்லலாம். அதனால் தான், சமையலில் இஞ்சிக்கு தனி இடம் கொடுத்தனர் நமது முன்னோர்கள்.
அலுவலகத்தில் கடும் பணியின் காரணமாகவோ அல்லது பல்வேறு பிரச்சனைகள் காரணமாகவோ பலருக்கு மன அழுத்தம் ஏற்படும். சிலருக்கு சதா ஏதாவது ஒரு கவலை வாட்டும். அது போன்ற சமயங்களில் எல்லாம், சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிட்டால், கவலை காணாமல் போய்விடும் என்பது மருத்துவ உலகின் அசைக்க முடியாத நம்பிக்கை. இது ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை.
மன அழுத்தம் காரணமாக, வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கும். இதனால் ஜீரண சக்தியும் பாதிக்கும். இது போன்ற சமயங்களில் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பின்பு, பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும், பலருக்கும், சோகம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துகிறது. எனவே, கவலை வரும் போது இஞ்சி டீ சாப்பிடுங்க. கவலை காணாமல் போகும். 

Article By TamilFeed Media, Canada
3175 Visits

Share this article with your friends.

More Suggestions | Health