ரம்புட்டானின் நலன்கள்.

இதன் இனிப்பு மிகவும் நன்றாகவும், ருசியாகவும் இருக்கும். ஆனால் இந்த பழத்தை அதிகம் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு நான்கு , ஐந்து சாப்பிட வேண்டும். ஏனெனில் சிலருக்கு ஒவ்வாமையால் காச்சல், கண்ணோய் வரலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி உண்பர். இது சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த பழத்தாவரம் ஆகும். இவை மஞ்சள், சிவப்பு என இரண்டு வகைகளில் உண்டு.

இது ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். அமெரிக்கா , மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, போன்ற நாடுகளில் இந்த மரம் வளர்கின்றது. இலங்கையில் மல்வானை என்ற இடத்தில் இவை அதிகம் வளர்கின்றன.
இது குளிர்மையான பழம் ஆகும். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இதன் விதை, தோல்ப்பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு ஏதுவாக இனிப்பாக இருக்கும் .

இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. ரம்புட்டான் சாப்பிட முன்னர் பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும்.

கழுவிய பின்னரும் கூட ரம்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம். கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ணுங்கள். இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.

இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும்.வளர்ச்சி நிலையை பொறுத்து சதை வெவ்வேறு சுவையை கொண்டிருக்கும், அதிக அமிலம் மற்றும் இனிப்பு, புளிப்பு சுவைளை கொண்டுள்ளது.

இதில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், சர்க்கரை, நார்சத்து, கல்சியம், பொஸ்பரஸ்,அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளது. 

இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Article By TamilFeed Media, Canada
3421 Visits

Share this article with your friends.

More Suggestions | Health