செம்பருத்தி (செவ்வரத்தை) உடலுக்கு தரும் நன்மைகள்.

இந்த பூவில் பல நிறங்கள், மற்றும் ஒற்றை, அடுக்கு (கொத்து) என பல வகைகள் உள்ளன.இவற்றின் பூக்கள் மற்றும் இலைகள் நன்மை தரும்.

இந்த பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் ஏற்படும் பொடுகுகளை நீக்கவும் உதவும். 
இந்த பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். உடலுக்கு குளிர்மையும் கிடைக்கும்.

இந்த பூவின் காய்ந்த மொட்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து தொடர்ந்து தலையில் தடவி வந்தால் கூந்தல் கருமையாக இருக்கும்.

இந்த பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதனை சம்பல் செய்து சாப்பிடலாம். 

மேலும் இதன் இலைகளை கொதிக்க வைத்து அருந்தினால் இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். 
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி அதனுடன் வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து ஒரு போத்தலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தடவி குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

Article By TamilFeed Media, Canada
6341 Visits

Share this article with your friends.

More Suggestions | Health