அயோடின் சத்து அனைவருக்கும் அவசியமானது.

அயோடின் மனிதனின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது உடலில் சராசரி அளவைவிட குறையாமல் இருந்தால், அவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

அயோடின் குறைபாடு உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.ஒருவரது உடலில் இது சராசரி அளவைவிட குறைவாக இருந்தால்,எப்போதுமே எந்த வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துபோய் விடுவார்கள், சுறுசுறுப்பு என்பது இவர்களிடம் குறைவாகவே இருக்கும். மற்றும் விரக்தி, மன அழுத்தம், மனநிலை பாதிக்கப்படல், அசாதாரண உடல் எடை மாற்றம்,கரடுமுரடான தோல், மலச்சிக்கல், சோர்வு,களைப்பு,வெளிறிய தன்மை, போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

அயோடின் உடலின் வளர்ச்சி செயற்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கு கொண்டுள்ளது. இது உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தை கட்டுப்படுத்துகின்ற தைராய்டு ஹார்மோன்களை சுரக்கும். இதன் மூலம் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படுவதை தடுக்கும். மற்றும் கால்சியம்,சிலிக்கான் போன்ற பல்வேறு கனிமங்கள்,கலோரிகள் கிடைப்பதுடன் நச்சுக்களை அகற்றவும் உதவுகின்றது. மனித உடலில் உள்ள அயோடின் சுமார் 60% தைராய்டு சுரப்பியாக சேமிக்கப்படுகிறது. இது தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாட்டிலும் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கின்றனது.

நாளொன்றுக்கு அயோடின் 100-200 McG தேவை,எனவே அயோடின் கலந்த உப்பு, மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதால் அயோடின் சத்து நம் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது. இதனால் அயோடின் பற்றாக்குறையை போக்கலாம்.

 

Article By TamilFeed Media, Canada
3378 Visits

Share this article with your friends.

More Suggestions | Health