உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் ஆரோக்கியம் தரும்.

உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் ஆரோக்கியம் தரும்.

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற நோயைக் குணப்படுத்த அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் தரும்.

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்து உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் மூன்று வேளையும் குடிக்க வேண்டும்.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.

இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து ஒரு போத்தலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.

உண்டு இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம்.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்த நீரை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சாப்பிடலாம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக பசலிக்கீரை, தக்காளி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம்? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம். 

 உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். எனவே உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.

Article By TamilFeed Media, Canada
2901 Visits

Share this article with your friends.

More Suggestions | Health