ஒரே முயற்சியில் இரண்டு பலன்கள்! உடல் எடையை குறைக்கவும், சருமத்தை அழகுப்படுத்தவும் கிரீன் டீ....

சமகாலத்தில் பெண்கள் அவர்களது அலுவலக வேலைகளுக்கு மத்தியில் தம்மை அழகு படுத்தும் வேலைகளை செய்துக் கொள்ள முடியாமல் அதாவது நேரமின்மையால் அவதிப்படுகின்றனர்.

சமகாலத்தில் பெண்கள் அவர்களது அலுவலக வேலைகளுக்கு மத்தியில் தம்மை அழகு படுத்தும் வேலைகளை செய்துக் கொள்ள முடியாமல் அதாவது நேரமின்மையால் அவதிப்படுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க பெண்கள் தமது உடலை சிலிம்மாக வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர்.

ஜிம்முக்கு போகாமல் வோக்கிங் செய்யாமல் உடல் எடையை வீட்டில், அலுவலகத்தில் இருந்தவாறே உடல் எடையை குறைக்க கிரீன் டீ அருந்துங்கள்.

இது உடல் எடை குறைக்க மட்டுமல்ல சருமத்திற்கும் பொலிவையும் தரக் கூடியதாக கருதப்படுகிறது.

உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய விரும்புபவர்கள் கிரீன் டீ ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள். இது விரைவில் சருமத்திற்கு நல்ல பலனைத்தரக்கூடியது.

ஸ்க்ரப் செய்வதால் சரும துவாரங்களில் அடைத்திருக்கும் அழுக்குகளை அகற்ற முடியும். அதன் பின்னர் மாய்ஸ்ரைஸர் உபயோகித்திடுங்கள். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்

மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது.

கிரீன் டீ பெக்கை வெதுப்பான நீரில் ஒரு நிமிடம் ஊற விட்டதன் பின்னர் டீ பெக்கிலிருக்கும் டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தேயுங்கள். 

நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள். 

இவ்வாறு தினமும் செய்து வந்தால் மாசின்றி உங்கள் முகம் பிரகாசிக்கும். நீங்களும் இன்றே முயற்சி செய்து பாருங்கள் பலன் பெறுங்கள்.

Article By TamilFeed Media, Canada
2384 Visits

Share this article with your friends.

More Suggestions | Health