கர்ப்ப காலத்தில் செய்ய கூடியதும் , கூடாததும்

கர்ப்ப காலத்தில் செய்ய கூடியதும் , கூடாததும்

பெண்களுக்கு மட்டுமே கிடைத்த பெரிய வரம் கர்ப்பம் தரித்த காலம் தான்.இந்த காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.சாதாரணமான நேரங்களில் செய்யக்கூடிய சில விடயங்களை தவிர்க்கவும், பல விடையங்களை புதிதாக செய்யவும் வேண்டி நேரம் இந்த கர்ப்ப காலம் ஆகும்.

இந்த கர்ப்ப காலத்தில்தான் ஆளாளுக்கு அறிவுரை என்ற பெயரில் பலர் தமக்கு தெரிந்தது, தெரியாதது என்று நிறைய அறிவுரைகளை வழங்குவார்கள்.இதனால் கர்ப்பவதிகள் குழம்பிப்போவதும் உண்டு.ஆகையால் சரியான மருத்துவ ஆலோசனைகளாக கருதக்கூடிய விடயங்களில் மட்டும் கவனத்தை செலுத்தி கொள்வது நல்லது.

 தம்முடன் சேர்த்து இன்னுமொரு உயிரை சுமக்கும் பெண்கள் இந்த காலத்தில் கட்டாயமாக சில விடையங்களை செய்ய வேண்டி இருக்கின்ற அதே நேரம் ஒரு சில விடயங்களை செய்யாமல் விட வேண்டியும் உள்ளது.அவ்வாறு கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய விடயங்களும், செய்ய கூடாதவவைகளும் என்னவென்று பார்ப்போம். 

தீய பழக்கங்களை கைவிட வேண்டும் .

கர்ப்ப காலத்தில் தீய பழக்கங்களாக கருத்தப்படக்கூடிய மது அருந்துதல்,மற்றும் புகைபிடித்தல் என்பனவற்றை கட்டாயமாக கைவிட வேண்டும்.இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கே அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். பிறக்கும் குழந்தைகள் நோய் வாய்ப்பட்டு அல்லது ஊனத்துடன் பிறக்கும் சந்தர்ப்பம் பெரியளவில் இருக்கின்றது.மேலும் இவ்வகை குழந்தைகளுக்கு மனநிலை பாதிப்பு ,கற்றல் குறைபாடுகள்,நடத்தை பிரச்சனைகள், குறைவான பிறப்பு எடை மற்றும் போதிய வளர்ச்சி இல்லாமை ஆகியவை ஏற்படும்.புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை கைவிட வேண்டுமெனில்,உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். 

பூனைகளின் கழிவிலிருந்து தள்ளி இருக்க வேண்டும் 

இது சற்றே விசித்திரமாக இருக்கலாம்.இது பலருக்கும் தெரியாத ஒன்று.உங்களிடம் பூனை இருந்தால் அதன் கழிவுகளை நீங்கள் சுத்தம் செய்ய கூடாது.ஏனெனில்,அதில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளது.குறிப்பாக, டோக்ஸோபிளாஸ்மா கான்டி என்ற ஒட்டுண்ணி ஒன்று உள்ளது. உடல் உபாதைகள் தீவிரமாகும் வரை, உங்களுக்கு அதனால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியாது.இதனால் கருச்சிதைவு,குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

அதிகளவிலான தேநீர் அருந்தகூடாது 

தேநீரில் இருக்க கூடிய காஃபின் பெண்களின் நஞ்சுக்கொடியின் வழியாக குழந்தைக்குள் ஊடுருவி,குழந்தையின் இதய துடிப்பை பாதிக்கும்.இதனால் கருச்சிதைவு ஏற்படலாம்.எந்த அளவுக்கு அதிகமாக காஃபின் உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.இதற்காக நீங்கள் முற்றிலுமாக காஃபினை தவிர்க்க வேண்டும் என்றில்லை.ஒரு நாளைக்கு 200மிலி குறைவாக பருக வேண்டும்.இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில்,தவறுதலாக நீங்கள் அதிகளவு காஃபின் உட்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

உடைகளில் கவனம் தேவை

கர்ப்ப காலத்தில் நீங்கள் உங்களது உடலின் வளர்ச்சி அதிகரித்திருக்கும்.நீங்கள் முன்பு அணிந்திருந்த உடைகள் தற்போது உங்களுக்கு சரியாக இருக்காது.எனவே நீங்கள் புதிய இலகுவான உடைகளை வாங்கி பயன்படுத்துங்கள். கர்ப்ப கால உடைகள் முன்பு போல இல்லை.இப்போது ஃபேஷனாகவும் டிரெண்டியாகவும் உள்ளது.எனவே இந்த உடைகள் நீங்கள் கர்ப்ப காலத்தில் அழகாக வளம் வர உதவியாக இருக்கும். 

ஹீல் செருப்புக்களை தவிர்த்து கொள்ளுங்கள் 
நீங்கள் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை அணியும் ஆர்வம் உடையவர்களாக இருந்தால்,இதனை கட்டாயமாக தவிர்க்க வேண்டியது அவசியம்.கர்ப்ப காலத்தில் ஹீல்ஸ் செருப்புகள் அவ்வளவு சரியான தேர்வாக இருக்க முடியாது.எனவே தரையோடு தரையாக இருக்கும் ஃபிளாட் செருப்புகளையே பயன்படுத்துங்கள். 

மருந்துகள் கவனம் தேவை 

மருத்துவரின் அனுமதி இல்லாமல் நீங்கள் மருந்துகளை உட்க்கொள்வதை தடுக்க வேண்டியது அவசியம். காய்ச்சலாக இருக்கிறது.தலைவலிக்கிறது.ஜீரண பிரச்சனை இருக்கிறது என்று எல்லாம் நீங்களே ஏதாவது ஒரு மருந்தை எடுத்துக் கொள்வது கூடாது.

மருத்துவ ஆலோசனை அவசியம் 

உடலுறவு எப்போது வரை உங்கள் மருத்துவர், உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறாரோ அது வரை வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. எதற்கும் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. 


குப்புறப்படுக்க கூடாது 

நீங்கள் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், குப்புறப்படுக்கவே கூடாது. இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகும்.ரத்தம் ஓட்டம் தடையாகவும் வாய்ப்புகள் உள்ளது. 

மருத்துவ பரிசோதனைகள் அவசியம் 

நீங்கள் மருத்துவர் குறிப்பிட்டு கொடுத்த நாட்களில் எல்லாம்,மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும்.அவர் செய்ய சொல்லும் பரிசோதனைகளை செய்வதன் மூலமாக,குழந்தையின் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை குழந்தை ஆபத்தான சூழ்நிலையில் இருந்தாலும் கூட,அதனை சரி செய்து விடலாம்.எனவே மருத்துவர் சந்திப்பையும்,பரிசோதனைகளையும் தவறாமல் செய்து கொள்ளுங்கள். 

சாப்பிடாமல் இருக்க கூடாது.

நீங்கள் கர்ப்ப காலத்தில் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க கூடாது.விரதம் இருப்பது,டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் நீண்ட நேரம் இருப்பது இவைகள் எல்லாம் உங்களையும்,குழந்தைகளையும் பாதிக்கும் ஒன்றாக இருக்கும்.குழந்தையின் சர்க்கரையின் அளவை சரியாக பராமரிக்க இது உதவியாக இருக்கும்.எனவே நீங்கள் வெளியில் செல்லும் போது கூட ஒரு பிஸ்கட் பாக்கெட்டையாவது உடன் எடுத்து செல்லுங்கள். 


விளையாட்டுக்களை தவிர்க்க வேண்டும் 
ஆபத்துக்கள் நிறைந்த விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு சில சமயங்களில் ஆபத்துக்கள் நிறைந்த விளையாட்டுகளை விளையாடும் போது கீழே விழுந்து அடிபட கூடும். எனவே இவற்றை தவிர்க்கவும்.உடற்பயிற்சி ஒரு காலத்தில்,உங்களின் இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 140 மேல் இருந்தால்,குழந்தையின் உடல் சூட்டை அதிகரிக்கும் என நம்பப்பட்டது.அதனால், கர்ப்பிணிகள் வேலை செய்யவே மாட்டார்கள்.ஆனால் இன்றோ,மருத்துவர்கள் கர்ப்பிணிகள் உடற்பயிற்சி,குறிப்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.இது தாய் மற்றும் சேய் இருவரின் உடல் நலத்திற்கும் நல்லது.கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசை பயிற்சி,தூக்கமின்மை போன்றவற்றிக்கு இது ஒரு சிறந்த நிவாரணம் ஆகும்.

Article By TamilFeed Media, Canada
3373 Visits

Share this article with your friends.

More Suggestions | Health