வியாபார வளர்ச்சிகளின்போதும், தொழில் நிலைகளின் முன்னேற்ற நிலைகளின் போதும் ஏனைய பிற வேலைகளை முன்னேற்றகரமாக செய்ய முற்படும்போதும் அனைவருக்கும் ஒரு அழுத்தநிலை ஏற்படுவது வழமை.
இவ்வாறான அழுத்தங்கள் காரணமாக எமது வாழ்க்கைநிலை மற்றும் தொழில் என்பனவற்றில் எம்மால் முன்னேற்றம் காண முடியாமலும் உடல் உபாதைகள் மற்றும் மந்தநிலை போன்ற அசாதாரண நிலைகள் என்பன ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் மிகவும் அதிகபட்சமாகவே காணப்படுகின்றது.
இந்த காலத்தில் அனைத்து தரப்பினருக்கும், அனைத்து வயதினருக்கும் மன அழுத்தம் என்பது சாதாரணமாகவே காணக்கூடியதாக உள்ளது . உங்களை முன்னேறவிடாமல் தடுக்கு இந்த மன அழுத்த காரணிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை காணலாம்
மூச்சுப்பயிற்சி (Deep Breath)
ஹாவார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கருத்தின் படி நீங்கள் தேர்ந்தெடுக்க கூடிய, உங்களுக்கு பிடித்தமான இடத்தில் நீங்கள் உங்கள் மனது இலேசாக மாறும் தன்மை உள்ளது. ஜனநெரிசல் இல்லாத, பறந்த விசாலமான அமைதியான சூழ்நிலையில் நீங்கள் ஆழ்ந்த மூச்சு பயிற்சியினை மேற்கொள்ளும் போது உங்களின் மனசோர்வு பேரளவில் கட்டுப்படுத்தப்படுகின்றது.
அவ்வாறே ஆழமான மூச்சுப்பயிற்சியின் மூலம் நுரையீரலின் இயக்கம் சீராக்கப்படுவதுடன் இதயத்தின் இரத்த சுற்றோட்டமும் சீர்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக தொப்பையில் சேரும் கொழுப்பின் அளவும் கணிசமாக குறைக்கப்படுகின்றது. இதனால் உடல் உபாதைகளும் குறைவடைகின்றதை அவதானிக்க முடிகின்றது.
சிரிப்பு (Laugh)
இக்காலத்தில் சிரிப்பதை கண்டிப்பான ஒரு மருத்துவ முறையாக அனைவரும் கையாண்டு வருகின்றனர். அலுவலக நேரங்களில் அடிக்கடி சிரித்துக்கொள்வதால் யாரும் தப்பாக நினைப்பார்களோ? அல்லது அது தொழிலுக்கும் பிறருக்கும் இடைஞ்சலாக இருந்துவிடப்போகிறது என்று பலரும் பயத்துடனேயே சிரிக்க மறந்து இருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. மனசோர்வை வெகுவாய் குறைக்கும் சிறந்த மருத்துவ முறை சிரிப்பு என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.
உடற்தசைகளை உருவிக்கொள்ளுதல் (Massage)
உடல் தசைகளை மற்றும் தலைபகுதியை பிடித்துவிடுதல் மற்றும் உருவி விடுதல் என்ற ஸ்பரிச முறை மருத்துவம் பலராலும் விரும்பப்படும் ஒன்று. 2005 ஆம் ஆண்டு மியாமி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின் மன சோர்வை தூண்டக்கூடிய கார்டிசோல் எனும் சுரப்பின் அளவானது உடல் மற்றும் தலைப்பகுதியில் பிரயோகிக்கப்படும் ஸ்பரிச அழுத்த சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் விரைவாக கொண்டுவரப்படுகின்றதாக அறியப்படுகின்றது
மனதால் உங்களின் உடலை அளவையிடல் (Do a mental scan of your body)
தியானம் மற்றும் மனசாந்தி தொடர்பான பிரபல Headspace இணையத்தின் துணை இயக்குனரான அண்டி புடிக்கொம்பே (Andy Puddicombe) தமது இணைய ஆய்வுகளின் மூலம் தொழில் முறையிலான அநேகமான மனசோர்வுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் பல்வேறு உபாயங்களை விபரித்திருக்கின்றார். அந்தவகையில் நீங்கள் மனசோர்வாக இருக்கும் பட்சத்தில் உங்களின் கண்களை 30 நொடிகளுக்கு மூடி வைத்துக்கொண்டு உங்களின் மனக்கண்களால் உங்கள் உடல் அவயங்களை அளவையிடுவதன் மூலம் பேரளவில் உங்களின் மனசோர்வினை குறைத்துக்கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.
"உடல் உணர்வை மையமாக மாற்றுவதன் மூலம், சிந்தனை மனதில் இருந்து நீங்கி, உடலில் மனதைக் கொண்டு வருகின்றது, உடனடியாக இது மனதை அடக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது," என்று புடிக்கொம்பேயின் ஆய்வு தகவல் குறிப்பிட்டுள்ளது.
நன்றிப்பகிர்தல் (Show gratitute)
நீங்கள் பிரதி உபகாரம் செய்யாதுவிட்டாலும் பரவாயில்லை, உங்களுக்கு உபகாரம் செய்பவர்களுக்கு நன்றிகளை பகிர்தலானது உங்கள் மனசோர்வை வெகுவாக கட்டுப்படுத்தும் என அறியப்படுகின்றது. உங்களால் தெரிவிக்கப்படும் நன்றி என்பது வார்த்தைகளின் மூலமாக மட்டுமல்ல செயல்களின் மூலமாகவும் இருக்கும் பட்சத்தில் மன ரீதியில் திருப்பதி தன்மையானது கண்டிப்பாக உணரப்படும் என்பதனை மருத்துவ ரீதியிலான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது பலவித அழுத்தக்காரணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் என்பது அறியப்படும் ஒன்று ஆகும்.
நீரைப்பருக்குதல் (Drinking Water)
உடலின் தட்ப வெப்ப நிலை மாறுதல்கள் மூலம் அதிகமான மன அழுத்த விடயங்கள் உணரப்படுவது மருத்துவ ஆய்வுகள் மூலமும் கண்டறியப்பட்ட உண்மை ஆகும். அதிக வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர்த்தன்மை வெகுவாக குறைவடைவதால் உடல் காய்ந���துபோனது போல உணரப்படும். உடலுக்கு தேவையான நீர்மட்டம் குறைவடைவதன் மூலம் எமது உள்ளக உறுப்புக்களின் இயல்பான இயக்க நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மனசோர்வு மற்றும் மன அழுத்தம் பேரளவில் ஏற்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதிகமாக நீரைப்பருக்குதல் உடலின் இயக்கத்தன்மை சீராக்கப்படுவதுடன், உடலில் தோன்றக்கூடிய சீர்கேடுகள் வெகுவாக கட்டுப்படுத்துவதன் மூலம் மனவழுத்தத்தினையும் பேரளவில் குறைத்தும் விடுகின்றது.