ஆண்களுக்கும் இருக்கு அழகு குறிப்புகள்

ஆடவரை அழகாக்கிட சில எளிய குறிப்புகள்

தம்மை தாமே அழகாக காட்டிக்கொள்வதில் பெண்கள் மிகவும் கரிசனையுடன் இருப்பது அறிந்ததே,அதற்கு மாறாக ஆண்களும் தம்மை அழகாக கட்டிக்கொள்வதில் இப்போது அக்கறை காட்டி வருகின்றனர் . பெண்களை விட ஆண்களுக்கே சரும பிரச்சினைகள் அதிகளவிலான இருக்கும் . இந்த பிரச்சினைகளில் இருந்து உரிய பராமரிப்பை பெற்றுக்கொள்ள அவர்கள் நேரத்தை கூட செலவழிக்க மாட்டார்கள் .மட்டுமன்றி தமது பிரச்சினைகள் தொடர்பில் பிறருடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது கலந்தாலோசிக்கவோ மாட்டார்கள் என்பது உண்மையே. 

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் கடினமானது, அது மட்டுமன்றி பெண்களை விட ஆண்களே வெளியிடங்களுக்கு அதிகமாக சென்று வருபவர்கள். இவர்களின் சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் மற்றும் அழுக்குகளும் அதிகஅளவில் இருக்கும் . இதனை ஆரம்பம் முதலே சரியான பராமரிப்புடன் கவனித்து வந்தால் முகம் கருமையாக காணப்படுவதை குறைத்துக்கொள்ளலாம் .


எல்லா ஆண்களுக்கும் வெவ்வேறு வகையான சரும வகைகள் காணப்படும். ஒரு சிலருக்கு எண்ணெய் தன்மை உடையதாக இருக்கும், இன்னும் சிலருக்கு வறண்ட சருமம் காணப்படும். எனவே இவர்களின் ஒவ்வொரு சரும வகைகளுக்கு எவ்வகையான அழகு குறிப்புகளும் முகபூச்சுக்களும் , போக்குகளும் பொருந்தும் என்பதை பார்க்கலாம் 

  •  தயிர் மற்றும் மஞ்சள் - கருமையை போக்கும் 

ஆண்கள் அதிகம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தமாட்டார்கள். எனவே அவர்களது சருமம் எளிதில் கருமையாகிவிடும். ஆனால் இந்த வகை ஃபேஸ் பேக் சருமத்தில் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும். அதற்கு ஒரு டீஸ்பூன் தயிருடன் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கருமையாக இருக்கும் கை, கால்களிலும் தடவவும். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும்.

  •  ஓட்ஸ் மற்றும் மில்க் க்ரீம் - வறட்சியைப் போக்கும்

நிறைய ஆண்கள் சரும வறட்சியால் அவஸ்தைப்படுவார்கள். சருமம் அதிகம் வறட்சியடையும் போது, அசிங்கமாக தோல் உரிந்து காணப்படும். அதனைப் போக்க ஓட்ஸ் மற்றும் பால் கிரீம் (Milk Cream) கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். அதுவும் சிறிது மில்க் க்ரீம் உடன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

  •  வேப்பிலை - பருக்களைப் போக்கும் 

பெண்களைப் போன்றே ஆண்களும் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இதற்கு வேப்பிலை நல்ல பலனைத் தரும். வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, பருக்களைப் போக்கும். அதற்கு 1 டீஸ்பூன் வேப்பிலை பொடியுடன், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் பருக்கள் காணாமல் போகும்.

  •  துளசி மற்றும் புதினா - முகப் பொலிவை அதிகரிக்கும்

இந்த புதினா ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவோடும் பிரகாசமாகவும் மாற்றும். இது ஆண்களுக்கான மிகச்சிறந்த ஃபேஸ் பேக். அதற்கு சிறிது துளசி மற்றும் புதினா பவுரை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளலாம் அல்லது சிறிது துளசி மற்றும் புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். பின் அதை முபத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

  •  தேன் மற்றும் ஆரஞ்சு- மிருதுவான சென்சிடிவ் சருமத்திற்கு 

ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இதனால் சரும நிறம் அதிகரித்துக் காணப்படும்.

  • கடலை மாவு பேக்

பெண்கள் மட்டும் தான் கடலை மாவைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் கட்டாயம் பயன்படுத்தலாம். இது அனைவருக்கு முகப் பொலிவை அதிகரிக்க உதவும். முக்கியமாக இது கரும்புள்ளிகளைப் போக்கும். அதற்கு 1 டீஸ்பூன் கடவை மாவுடன், 3 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • தயிர் மற்றும் அரிசி மாவு பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தை வெளியேற்ற உதவும். இது அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. அதற்கு அரிசி மாவை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Article By TamilFeed Media, Canada
2744 Visits

Share this article with your friends.

More Suggestions | Health