வெப்பத்திலிருந்து எமது உடலை பாதுகாத்து கொள்வோம்.

வெப்பத்திலிருந்து எமது உடலை பாதுகாத்து கொள்வோம்.
  • வெயில் காலங்களில் ஓசோன் மண்டலத்தில் விழுந்துள்ள துவாரம் வழியாக அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க ஆட்டோ ரிப்லக்ஸன் கிளாஸ்'(Auto reflection glass) அணிவது நல்லது.
  • உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி போன்றவற்றையும் அதிகம் சாப்பிட வேண்டும்.
  • குளிக்கும்போது எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை மணம் வராது.
  • கோடை காலத்தில் வரும் அக்கி, அம்மை போன்ற நோய்களுக்கு வெள்ளரியும், கிர்ணிப்பழமும் மகத்தானது.
  • காஸ் நிரம்பியுள்ள குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்த்து இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழ வகைகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
  • ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) இவைகளை சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி பெரும்.
  • வட்டமாக அரிந்த வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொண்டு உறங்கினால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். 
  • மருதாணியையும், கரிசலாங்கண்ணி இலையையும் சேர்த்துக் காய்ச்சப்பட்ட தேங்காய் எண்ணெயைத் தலைக்கு வைத்து, மறுநாள் காலை வில்வங்காய் கலந்த சீயக்காய்ப் பொடி தேய்த்துக் குளிப்பது கோடைக் காலத்துக்கு உகந்தது.
Article By TamilFeed Media, Canada
2856 Visits

Share this article with your friends.

More Suggestions | Health