குடை மிளகாயின் நோய் எதிர்ப்பு தன்மைகள்.

குடை மிளகாய் உடலிலுள்ள கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை தருகிறது.

 

குடைமிளகாயில் விட்டமின் ஏ, பி, சி, கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளது. இது காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுக்கு அழகு சேர்க்கும் சிறப்பு தன்மை உண்டு. இது வாதம் தொடர்புடைய நோய்கள், மற்றும் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. 

கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் இருக்கிறது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும். இதில் உள்ள கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது. 

100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்துக்களும் அவற்றின் அளவுகளும்.

புரோட்டின் – 0.99 கிராம். சக்தி – 31 கலோரி. சோடியம் – 4 மி.கிராம். கொலஸ்ட்ரால் – இல்லை. கொழுப்பு – 0.3 மி.கிராம். தாதுச் சத்து – 6.02 மி.கிராம். கல்சியம் – 7 மி.கிராம். பொட்டாசியம் – 211 மி.கிராம். மெக்னீசியம் – 12 மி.கிராம். விட்டமின் சி – 127.7 மி.கிராம். கல்சியம் – 7 மி.கிராம். இரும்பு – 0.43 மி.கிராம்.

Article By TamilFeed Media, Canada
3093 Visits

Share this article with your friends.

More Suggestions | Health