நாட்டுத்தக்காளி, ஆப்பிள் தக்காளி என்று பல வகைகள் இருந்தாலும் மருத்துவ குணத்திலும், சத்துக்களிலும் ஒரே தன்மையையே கொண்டுள்ளன.
இதில் விட்டமின் எ சத்து அதிகமாகவும், விட்டமின் பி1, விட்டமின் பி2, விட்டமின் சி என்பனவும் சுண்ணாம்புச் சத்து குறைந்த அளவிலும் உள்ளது.
தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு அத்துடன் இரத்தத்தை உற்பத்தி செய்வதும் இரத்த ஓட்டத்தை சீராக பேணவும், உடலில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்கும் விசேட தன்மையும் உண்டு.
தக்காளிப் பழத்தை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நன்றாக ஆரோக்கியம் பெறுவதுடன் சருமம் மென்மையாகவும் புதுப்பொலிவுடனும் காட்சிதரும்.
தக்காளிப் பழம் புளிப்பு தன்மை கொண்டது எனவே அதனை ஜாம் செய்து உணவுகளுடன் பூசி கொடுத்தால் சிறுவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் இதன் மூலம் சரும நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
புற்றுநோயை விரட்டுகின்ற ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் சி மற்றும் பிற ஆண்டியாக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது இவை புற்றுநோய் ஏற்படுத்தும் எதிரிகளுக்கு எதிராக போராடும்.
- இதிலுள்ள நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
- இரத்த அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.
- இதய ஆரோக்கியத்தை பேணுகிறது.
- நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.
- மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவுகின்றது.
- மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.
- பழங்களில் மிக எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி, உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும்.