தக்காளி சோசை இதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா

பக்க உணவான தக்காளி சோசை பயன்படுத்தி செய்யக்கூடிய  பிற வேலைகள் இவைதான் 

சிற்றுண்டி வகைகளை நாம் உண்ணும்போது ஒரு சிலர் கண்டிப்பாக சோஸ், தொக்கு போன்ற பக்க உணவுகளையும் எடுத்து கொள்வது வழக்கம். இது உண்ணும் உணவை மேலும் சுவையூட்டிக்கொள்ள உதவுவதாக அமையும்.

உணவகங்களில் இப்பொழுது நாம் சிற்றுண்டிகளை வாங்கும்போது இலவசமாகவே இவ்வகை சோஸ் மற்றும் கெட்சப் பொதிகளை இணைத்தும் அனுப்புவது வழக்கம். இது ஒரு சிலருக்கு உணவுடன் உட்கொள்வதை விரும்புவதில்லை. மேலும் தேவையில்லை என தூக்கி எறிந்திடவும் செய்வார்கள்.

இவ்வகையாக சோஸ் மற்றும் கெட்சப் விகுதிகளை எறிந்து விடாமல் அவற்றை கொண்டு உபயோகமான முறையில் வேறு தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் 

  • செப்பு பொருட்களை சுத்தப்படுத்தலாம் 

செப்பு பாத்திரங்களில் உணவு சமைப்பதும், நீர் பருகுவதும் உடல் நலத்திற்கு நல்லது ஆகும் .ஆயினும் செப்பு பாத்திரங்களை சுத்தப்படுத்துவதென்பது மிகவும் கடினமான விடயம் ஆகும் .எனவே செப்பு பாத்திரங்களை தக்காளி சோசினை பயன்படுத்தி சுத்தப்படுத்தும்போது அது பளபளப்பாக இருக்கும்.


தக்காளி சோசினை சுத்தப்படுத்தவிருக்கும் செப்பு பாத்திரத்தில் தடவி 10 - 15 வைத்திருந்து பின்னர் மென்மையான துணியால் துடைத்துவிட்டு வெதுவெதுப்பான நீரின் மூலம் பாத்திரத்தை சுத்தப்படுத்தினால் செப்பு பாத்திரம் பளபளப்பாக இருக்கும் . 


இந்த முறையினை பாத்திரங்களுக்கு மட்டுமன்றி செப்பு நகைகளுக்கு பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம்.

  • பித்தளை 

பல வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் என்பன பித்தளையினால் ஆனது . இவற்றின் மீது காலப்போக்கில் கருப்பு திட்டுக்கள் பதிந்து விடும். தக்காளி சோஸில் இருக்ககூடிய அசிட் தன்மையானது இவ்வகை கருப்பு திட்டுக்களை போக்க வல்லது .

பித்தளை பாத்திரத்தில் கெட்சப்பை ஊற்றி துடைத்துவிட்டு பின்னர் கழுவினால் போதும் . அவ்வாறே சிறிய பித்தளை பொருட்களை கூட தக்காளி கெச்சப்பில் ஊறவைத்து பின்னர் சுத்தப்படுத்தும்போது நல்ல பலனைத்தரும்.

  • வெள்ளி 

மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்படவேண்டியது வெள்ளி பாத்திரங்கள்,நகைகளும் ஆகும். வெள்ளி பொருட்களை வெளியே வைக்கும்போது இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகி அதன் மீது படிமங்கள் தோன்றும். இதனை கெச்சப்பின் மூலம் சுத்தப்படுத்தலாம், 

வெள்ளி பாத்திரங்கள் மீது தக்காளி கெச்சப்பினை 10 நிமிடத்திற்குள் தடவி வைத்தால் போதுமானது. இதன் காரணம் தக்காளியில் இருக்கும் அசிட் தன்மையானது பாத்திரங்களை பழுதடையவும் செய்துவிடும். அவ்வாறு இல்லாமல் 10 நிமிடங்களுக்குள்ளாக வெள்ளிப்பொருட்களின் மீது தடவி வைத்துவிட்டு அதனை பழைய பிரஷ் அல்லது துணியினை கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தலாம்.

  • கருகிய பாத்திரங்கள் 

அடுப்பில் வைத்துப்பயன்படுத்தும் பாத்திரங்களின் மீது மாறாத கரைகளாக கருப்பு காபன் துகள்கள் படிந்து இருக்கும். இதனை எவ்வளவு தான் அழுத்தி தேய்த்தாலும் அதன் கரை போகாமலிருக்கும் . 

இவ்வாறு அடிபிடித்த பாத்திரத்தில் தக்காளி கெச்சப்பினை ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடேற்ற வெந்ததும். கெட்சப் கலந்த நீர் வற்றிவிடாதவாறு சூடற்ற வேண்டும். தன்னை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் சுத்தப்படுத்தினார் கருமைநிற கறைகள் இல்லாமல்போய்விடும்.

  •  கார் சுத்தமாக இருக்க 

காரில் படியும் தூசுக்களை தக்காளி சோஸ் எளிதாக சுத்தப்படுத்துகிறது.காரை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அலசிவிட்டு , துணியில் தக்காளி சோசினை எடுத்து நன்றாக காரின் மேல் தடவி பிறகு தண்ணீர் கொண்டு அலசினால் போதும்.கார் புதியது போல பளபளப்பாக தோற்றமளிக்கும்.

  • இரும்பு துரு 

 தோட்டத்திலும் வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய இரும்பு பொருட்கள் மண்வெட்டி , கோடரி மற்றும் கத்தி போன்ற பொருட்களில் காணப்படும் துருக்களை கெட்சப்பினை கொண்டு சுத்தப்படுத்தலாம் .

துருப்பிடித்த இடங்களின் மீது கெட்சப்பினை தடவி தேய்த்து பிறகு கொஞ்சம் நேரம் கழித்தது கழுவி விட்டால் போதும். மேலும் கறைகள் அதிகமாக காணப்பட்டால் வாஷிங் சோடாவுடன் கெட்சப் மற்றும் தண்ணீர் கலந்து துருக்களின் மேல் தேய்த்து கழுவிட அவை மறந்து போகும்.

  • பிராணிகளின் துர்நாற்றத்தை போக்கும் 

வளர்ப்பு பிராணிகள் மீது சில சமயங்களில் துர்மணம் வீசும் . அவற்றை இல்லாமல் செய்ய முதலில் பிராணிகளை கெச்சப்பினை கொண்டு துடைத்துவிட்டு அதன் பின் பிராணிகளை குளிப்பாட்டும்போது பயன்படுத்தும் ஷாம்புக்களை கொண்டு கழுவினால் அவற்றின் மீது வீசும் துர்நாற்றம் இல்லாமல் போகும்.

Article By TamilFeed Media, Canada
5721 Visits

Share this article with your friends.

More Suggestions | Health