நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் புதிது புதிதாக மனிதனை புரட்டிப்போடுவதாக அமைகின்றது. இன்றைய நவீன சந்தையில் நமது தேவைகளை இலகுபடுத்த பல மாற்றீடான உணவுப்பொருட்கள் விதம் விதமாக செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டும், சில உணவுப்பதார்த்தங்களுக்கு செயற்கை உள்ளீடுகள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை விலை கொடுத்து வாங்குவதன் மூலம் நாம் உயிர் ஆபத்துக்களையும் விலை கொடுத்து வாங்குவதாக அறியப்படுகின்றது.
சில உணவு பதார்த்தங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் சில வதந்தி செய்திகள் நிலவி வருகின்றன. வியாபார யுக்திகளுக்காக இவ்வகையான பரப்புரைகள் நமக்கு பெரும் பீதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகின்றன. இதில் எது உண்மை தகவல்? எது போலியான தகவலென்பதை கூட அறிந்துகொள்ள முடியாதவாறு இருக்கின்றன.
சரும பராமரிப்பு, உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களுக்கு சில உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. இவற்றில் எத்தனை பதார்த்தங்களில் பெரும் உயிராபத்து விளைவிக்க கூடியன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியமானதாக நாம் நினைத்துக்கொண்டு வாங்கும் பொருட்களில் நாட்பட்ட நச்சுத்தன்மை கலந்திருப்பது நமக்கு தெரிவதே இல்லை.
இயற்கையானது மற்றும் சொற்களை கழிவுகளை கொண்டது என வகைப்படுத்தப்பட்டிருக்கும் ஒருசில உணவுகளில் பாரிய உயிராபத்துக்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகையான சில உணவுப்பொருட்களை இனம்காணலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar)
ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கின பயன்படுத்தப்படும் சீடர்களில் பெரும் உயிராபத்த்துக்கள் உள்ளன. இதில் விட்டமின்கள் , கனிமச்சத்துக்கள், மக்னீசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம்,கல்சியம் மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கலாக இருப்பதாக சொல்லப்படுகின்றன. முக்கியமாக வடிக்கட்டப்பட்ட சீடர்களில் சத்துக்கள் அகற்றப்பட்டிருக்கும், எனவே சீடர்களை வாங்கும் போது without the mother என்ற சொற்பதம் இருப்பின் வாங்கிட வேண்டாம்.
சுவையூட்டப்பட்ட தயிர்.
இயற்கை முறையில் பெறப்படும் தயிர் ஆரோக்கியமானது. ஆனாலும் தற்போதைய சந்தைகளில் சுவையூட்டப்பட்ட தயிர்களே பெரும்பாலும் கிடைக்கின்றன. இவ்வகை சுவையூட்டப்பட்ட தயிர்களில் சர்க்கரை,குளுக்கோஸ், போன்ற பொருட்கள் உட் சேர்க்கப்பட்டு இருக்கும். இவை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை ஆகும்.அவ்வாறே செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட தயிர்களும் ஆபத்தை தரக்கூடிய ரசாயன பதார்த்தங்களை கொண்டிருக்கும்.
செயற்கை பழச்சாறுகள் .
மென் பழச்சாறுகள் செயற்கை பதார்த்தங்களால் உரியுவாக்கப்பட்டு விற்பனைக்கு எடுக்கப்படும். இவற்றில் இயற்கை பழங்களின் சுவையூட்டியே சேர்க்கப்பட்டு இருக்கும்.முற்றிலும் செயற்கைத்தன்மையான இவ்வகை பழச்சாறுகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை . நாம் தாகமெடுத்தல் உடனே இவ்வகை செயற்கை பானங்களை வாங்கி குடிப்போம் இவற்றில் அதிகளவிலான உடலுக்கு கெடுவிளைவிக்க கூடிய செயற்கை சர்க்கரை காணப்படும். இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் இதய நோய்கள் என்பன ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் ஆகும்.
மூலிகை ஊட்டப்பணங்கள் (Herbal Supplements).
மருந்தகங்களில் மூலிகை ஊட்டச்சத்து பானங்கள் விற்கப்படுகின்றன. பொதுவாக ஊட்டச்சத்துபானங்களை பயன்படுத்தும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இவ்வகை பானங்களை அறிவுறுத்தல் இல்லாமலும் , அல்லது வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு மாறாகவும் பயன்படுத்தும் பட்சத்தில் உயிர் இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளது.இவற்றினை மருத்துவ ஆலோசனைகள் இன்றி எடுத்துக்கொள்வது முற்றிலும் தவறானதாகும்.
நீலக்கத்தாழை தேன் (Agave Nectar).
ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த நீலக்கத்தாழை தேன் குறித்து ஏற்கனவே தெரிந்திருக்கும். இதை பலர் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு மாற்றாக இந்த தேனைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த தேனில் புருக்டோஸ் எனும் பதார்த்தம் அதிகமான அளவில் இருக்கும்.இது பல்வேறு மோசமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக சர்க்ரை நோயாளியாக இருந்தால், நிலைமை மோசமாகும் வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் நீலக்கத்தாழை தேன் சர்க்கரையை விட மிக மோசமானது. வேண்டுமானால் சுத்தமான மலைத் தேனை வாங்கிப் பயன்படுத்துங்கள்.