வாய் விட்டு அழுதாலும் நோய் விட்டு போகும்!..

மனித உணர்வுகளை வெளிகாட்டுவதால் உடலில் ஏற்படும் பல்வகை மாற்றங்கள் மனிதனுக்கு நன்மை அளிக்கும் என மருத்துவ தகவல்கள் அறியத்தருகின்றன.

வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சிரிப்பை போலவே அழுகையும் ஓர் வரம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இதுவும் உங்கள் உடல்நலனுக்கு நன்மை விளைவிக்க கூடியது தான்.

சிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். 

அழுகை ஏன் அவசியம் என்பதற்கு காரணங்கள் இவை.

  • கண்கள் சிந்தும் கண்ணீர் நச்சுகளை அகற்றுகிறது

அழுவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது, ஏனெனில், இது உங்கள் உடலில் இருக்கும் பெருமபாலான நச்சுகளை அகற்ற உதவுகிறது. நீங்களே கூட சில சமயங்களில் உணர்ந்திருக்கலாம், நீங்கள் அழுது முடித்த சில நிமிடங்கள் கழித்து மேப்பட்ட உடல்நிலை மற்றும் மன நிலையை உணர்வீர்கள்.

  • கண்களை சுத்தம் செய்ய உதவுகிறது

கண்ணீர் வெளிப்படும் போது, கண் இமைகள் மற்றும் விழிகள் இடைப்பட்டு சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் இது, பார்வையை தெளிவாக்கவும் பயன் தருகிறது.

  • பக்டீரியாக்களை அழிக்கும் திறம் கொண்டது கண்ணீர்

கண்ணீர் லைசோசைம் எனும் திரவ பதார்த்தத்தை கொண்டுள்ளது. இது கண்ணில் இருக்கும் 90 முதல் 95% சதவீதம் வரையான பக்டீர்ரியாக்களை அழிக்கும் திறன் கொண்ட திரவம் ஆகும்.

  • மன நிலையை மேலோங்க வைக்க உதவும்

உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் கூட அழுகை உதவுகிறது. தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் கூட, மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.

  • இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது

இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்கு திரும்புகிறது. மற்றும் உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.

Article By TamilFeed Media, Canada
3133 Visits

Share this article with your friends.

More Suggestions | Health