இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், கனிமங்கள், மற்றும் பல சுகாதார மேம்பாட்டுக்கு தேவையான தாவர இரசாயனங்கள் நிரம்பியுள்ளது. இதில் கொழுப்பு மிக மிக குறைந்த அளவிலே காணப்படுகின்றது.
முந்திரியை சிறிய அளவில் தினசரி நுகர்ந்து வந்தால் இதய நோய் அபாயத்தை குறைப்பதுடன் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பேன உதவுகின்றது. இதை சைவ அசைவ உணவுகளில் சேர்க்கும் போது இதிலுள்ள புரதம் பெரிய ஆதாரமாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
இதில் பொட்டாசியம், கால்சியம் கனிமங்கள், மாங்கனீசு, தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ், போன்ற முக்கிய தாதுக்களையும் கொண்டுள்ளதால் அவை எலும்பு வளர்ச்சியை ஊக்கிவிக்கிவிப்பதோடு பற்களுக்கும் உறுதியைக் கொடுக்கின்றது. இதில் விட்டமின்களான K, B, மற்றும் E என்பன நிறைந்துள்ளது.
முந்திரிப் பருப்பு உடல் முழுவதும் ஆக்சிஜனை நுரையீரல்களிலிருந்து கடத்தும் சிவப்பு இரத்த அணுக்களின் ஒரு முக்கிய கூறாகிய ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்க்கு தேவையான சக்தியை கொடுக்கின்றது. மேலும்
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது.
முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.
எலும்புகளிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
ஆரோக்கியமான நரம்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
உடல் பருமனை குறைக்க உதவுகின்றது.
பித்தக்கற்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
இது புற்று நோயை தடுக்க உதவுகிறது.
இதயத்தை ஆரோக்கியமானதாக பேண உதவுகின்றது.
ஆரோக்கியமான ஈறுகளையும் பற்களையும் பேண உதவுகிறது.
இனிமையான தூக்கத்தை தருகிறது.
பக்கவாத நோயிலிருந்து பாதுகாக்கிறது.
முந்திரிப் பழத்திலும் விட்டமின் C உள்ளது, எனவே அதனை பழமாகவும், அதன் சாறு எடுத்தும் குடித்து வந்தால் எமக்கு தேவையான விட்டமின்களும் கலோரிகளும் கிடைக்கும்.