முள்ளங்கியில் எண்ணற்ற ஊட்டசசத்துக்கள் நிறைந்துள்ளது. இது வெள்ளை, சிவப்பு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரோக்கியமாக இருக்கலாம்.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ-கெமிக்கல்கள் மற்றும் ஆந்தோசையனின்கள் உள்ளது. அதுமட்டுமன்றி, அதில் உள்ள வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு, ப்ரீ-ராடிக்கல்கள் டி.என்.ஏ-வை பாதித்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் உட்கொண்டு வந்தால், உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சமநிலைப்படுத்தப்பட்டு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகமாகவும் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் சுரப்பதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
அத்துடன் நார்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கலாம் மேலும் முள்ளங்கி செரிமான அமிலத்தை சுரந்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும். இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
இது சளி மற்றும் இருமலை போக்க வல்லது, நெஞ்சில் தேங்கியுள்ள சளியை முறித்து, உடனடி நிவாரணத்தைத் தரும். மேலும் முள்ளங்கி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.
இது ஆரோக்கியமான சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதுடன், கற்கள் இருந்தாலும் அவற்றைக் கரைக்கவும் உதவும்.
(உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், தினமும் 50மிலி முள்ளங்கி சாற்றினை நீருடன் கலந்து குடித்து வந்தால், கற்கள் கரைந்துவிடும். அதுமட்டுமன்றி, முள்ளங்கியை உட்கொண்டு வந்தால், சிறுநீரக தொற்றுகள் தடுக்கப்படுவதோடு, அதில் உள்ள பொட்டாசியம் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, சிறுநீரகங்கள் சுத்தமாகும்)