அழகிற்கு பூசும் தலை முடிச்சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்.

எமது தலை மயிர் நரைக்கும் போது அதனை மறைப்பதற்காக பூசப்படும் இரசாயணம் கலந்த பதார்த்தமே சாயம் ஆகும்.

முடியின் கருமை நிறத்திற்கு எமது உடலில் சுரக்கும் மெலனின் என்ற நிறமிதான் காரணம். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த நிறமிகளை டிரையோஸின் என்ற என்ஸைம் தடை செய்கிறது இதன்போது முடியின் கருமை நீங்கி வெள்ளையாகின்றது.

ஆனால் சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்கு அவர்களின தவறான உணவுப்பழக்கம், மன அழுத்தம், தலையில் எண்ணெய் வைக்காததால் ஏற்படும் வறட்சி மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, போன்றவையே காரணங்களாகும். ஆனால் இதனை மறைப்பதற்காக ஆண்களும், பெண்களும் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்ற இரசாயண பதார்த்தம் உள்ளது இவற்றால் எமக்கு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

கூந்தல் வறண்டு போகும் இதனால் முடி உடைதல், முடி உதிர்தல், மற்றும் பொடுகு ஏற்படும் இதனால் தலையில் வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். , முகம், தோல் ஆகியவை சிவந்துபோதல், அவற்றில் அரிப்புகள் ஏற்படுதல். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது.hair dye side effects 

தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவைகளும் தோன்றும். கலர் சாயம் பூசும்போது அதில் இருக்கும் விஷத்தன்மை எளிதாக நாசியை அடைந்து உடலுக்குள் புகுந்துவிடும் இதனால் பல நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

தலைமுடிக்கு சாயம் உபயோகிப்பவராக இருந்தால் அல்லது அதனால் உங்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தால் அந்த சாய பாக்கெட்டினை மருத்துவரிடம் காண்பித்து ஒழுங்கான ஆலோசனையை பெறுவது நல்லது.

Article By TamilFeed Media, Canada
3454 Visits

Share this article with your friends.

More Suggestions | Health