வாழைப் பூவிலும் மருத்துவ பண்புகள் உண்டு.

வாழைப் பூவிலிருந்து எடுக்கப்படும் சத்து உடலின் திசுக்களை அழிவிலிருந்து பாதுகாப்பதும், நச்சுக்களைத் தடுக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது.

வாழைப் பூவில் விட்டமின்கள், பொட்டாசியம், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன், புரதம் என்பன நிறைந்துள்ளது.இதன் பழம் இனிப்பாக இருந்தாலும் பூ கயர்ப்பு தன்மை கொண்டது. இதனை பொரியல், கறி,கூட்டு,வடை,சம்பல் என பல்வேறு முறைகளில் சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

இது ஆஸ்துமா நோயைப் போக்க உதவுகின்றது.

நெஞ்சுச் சளியைப் போக்கவும் உதவுகின்றது.

மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவுகின்றது.

குடல் புண்களை ஆற்ற உதவுகின்றது.

பெண்களுக்கு மென்ஃட்ருவல் கிராம்ப் நோயைப் போக்கக் கூடியது.

சிறுநீரக நோய்கள், சிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுகின்றது.

வாழைப் பூவில் அதிக மருத்துவ பண்புகள் உண்டு எனவே வாரம் ஒரு முறை என்றாலும் உண்டு பயன் பெறுங்கள்.

Article By TamilFeed Media, Canada
3024 Visits

Share this article with your friends.

More Suggestions | Health