வாழ்க்கை, தொழில், கல்வி, எதுவாக இருந்தாலும் அவற்றின் இறுதிநிலையும், அனைவருக்கும் அடைய நினைப்பதுவும் வெற்றி, வெற்றி, வெற்றி மட்டுமே. நீங்கள் எந்த வயதில் உள்ளவராகவும் இருக்கலாம், எந்த நிலையில் இருபவராகவும் இருக்கலாம், வெற்றி என்பதை விரும்பாமல் மட்டும் உங்களால் இருக்க முடியாது.
அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டிருப்பது யாதென்றால் "வெற்றி என்பது ஒரு நடவடிக்கை அல்ல.அது ஒரு பழக்கம்." . இந்த வாசகம் பலரையும் வியக்க வைத்தது. எப்படி ஒரு சிலரால் மட்டும் தொடர்ந்து வெற்றியை மட்டுமே காண முடிகின்றது என பல நேரங்களில் நாம் ஆச்சரியப்பட்டு இருப்போம். அவர்களிடமிருந்து எப்படி தொடர் வெற்றிகளுக்கான யோசனைகளை பெற்றுக்கொள்வது என நாம் கண்டிப்பாக அடிக்கடி யோசித்து இருப்போம்..
இவ்வாறு வெற்றியை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என பிரபல நிறுவனமான ORACLE நிறுவனத்தினர் தந்துள்ள யோசனைகளை இங்கே
- 1. உங்களின் இலக்குகளை முன்னிலைப்படுத்துங்கள்.
நீங்கள் அன்றாட வேலைகளை செய்யும்போதும் உங்கள் பார்வைக்கு தெரியும் வகையில் நீங்கள் அடையவிருக்கும் இலக்கு, வெற்றிக்கான இலக்கு தொடர்பில் அடிக்கடிபார்த்துக்கொள்ளும் இடங்களில் காட்சிப்படுத்துவது நல்ல யுக்தி. அவ்வப்போது அதனை பார்க்கும்போது நீங்கள் மனதளவில் உத்வேகப்படுவீர்கள்.
உங்கள் இலக்குகளை காட்சிப்படுத்துவது சரியோ, தவறோ, உங்கள் இலக்கு என்பது என்ன என்று உங்களுக்கு உள்ள உறுதி நிலை இவ்வாறு அடிக்கடி உணரவைக்கப்படும்போது அதனை அடையவேண்டும் என்ற எண்ணம் அதிகப்படுத்தப்படும். இதன் மூலம் எப்பொழுதும் உங்கள் சிந்தனை வெற்றியை நோக்கியே இருக்கும் . அதுவே எண்ணமாக இருந்தால் வெற்றியை இலகுவாக நீங்கள் அடைந்துகொள்ளலாம்.
- 2. எண்ணங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
எமது மனநிலையில் எப்போதும் கடந்தகால நினைவுகள், கடந்துவந்த துன்பங்கள் என்பதுபற்றி அடிக்கடி சிந்தித்துக்கொண்டே இருப்போம். இது சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கும். இதனை எவ்வாறு வெற்றிக்கான அடித்தளமாக மாற்றுவது என பாப்போம்.
நீங்கள் கடந்தகாலங்களில் வெற்றிபெற்ற அனுபவங்களை மீட்டி பார்ப்பதன் மூலம் அதனை எவ்வாறு அடைந்தீர்கள் என்பது பற்றி யோசித்து வைத்தல் இப்பொழுதும் உங்களை மேலும் உத்வேகப்படுத்தும். அவ்வாறே தோல்வி நிலை எதனால் ஏற்பட்டது என்பதை மீட்டி பார்க்கும்போது அதன் காரணிகளை அறிந்து பிழைகளை மீண்டும் ஏற்படுத்தவிடாமல் தட்டுக்கலாம்.
எனவே இரைமீட்டுவது போல எண்ணங்களை மீட்டுவதும் புதுப்பித்து கொள்ளுவதும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வழி ஆகும்.
- 3. உங்கள் நம்பிக்கைகளை கொஞ்சம் தள்ளி வையுங்கள்.
சில பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்ற உங்களை முன்னேறவிடாமல் தடுக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? சில தினசரி எளிய நடைமுறைகளின் மூலம் எமது இலக்கினை அடைவதற்கான யுக்திகளை புதுப்பிப்பதன் மூலம் இலகுவாக வெற்றியை அடையும் வழிகளை இனம் கண்டுகொள்ளலாம்.
சில பழைமைவாதங்கள், ஒழுக்கவிதிகள் என்பனவற்றில் வெற்றி அடையும் வழிகள் பெறப்பட்டாலும் அவை அடைந்துகொள்வதில் மிக நீண்டகாலம் எடுக்கும் என்பதை உணரவேண்டும். நடைமுறை விடயங்களுக்கு ஏற்ப தம்மை புதுப்பித்துக்கொள்வதன் மூலம் வெற்றி இலக்கு இலகுவாக அடையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
- 4. நேரத்திற்கு முன்னர் செயல்படுங்கள்.
நீங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு, செய்யவேண்டிய விடயங்களுக்காக ஒதுக்கிய அல்லது நிர்ணயித்த நேரத்திற்கு முன்னதாக குறைந்ததது 15 நிமிடத்திற்கு முன்னதாக செல்வதற்கு அல்லது தொடங்குவதற்காக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இது உங்களின் பல தோல்விகளில் இருந்து உங்களை காப்பாற்றும். காலந்தவராமை என்பது பலராலும் விரும்பப்படும் ஒரு செயல்.
நேரத்த்தினை நிர்ணயம் செய்துகொள்வது உங்களின் வெற்றிக்கு சிறந்த யுக்தி ஆகும். நீங்கள் எடுத்துகொண்ட வேலையினை குறித்த நேரத்திற்கு முன்னர் செய்ய தொடங்குவது, நிர்ணயித்த நேரத்திற்கு முன்னர் செய்து முடிப்பது போன்ற நம்மீதான நன்மதிப்பினை அதிகப்படுத்தும் அதே நேரம் இதன் காரணமாக வெற்றி என்பது இலகுவாக நம்மை நோக்கியதாக இருக்கும்.
- 5. இல்லை என்றே சொல்லி பழகுங்கள்.
எதையும் "ஆம்" என்று ஒப்புக்கொண்டு அவதிப்படுவதைவிட , இல்லை என்று மறுதலித்து விட்டால் வெற்றி என்பது உங்களின் பக்கம் வரும்.இல்லை என்று தவிர்க்கப்படும்போது அதன் மீதான ���ழுத்தம் அதிகப்படுத்தப்படும்.
- 6. கவன சிதறல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களை இலக்குகள் மற்றும் கவனங்களை சிதறச்செய்யும் விடயங்களை முடிந்தளவில் தவிர்த்துக்கொள்வது நல்லது. உங்களை அனைத்து எண்ணங்களும் நீங்கள் செய்யப்போகும் விடயத்தைப்பற்றி மட்டுமே இருக்க வேண்டும். தொலைபேசி அழைப்பு, விளம்பர காட்சி, அருகில் உள்ளவரின் பேச்சு போன்றவற்றால் உடனேயே உங்களின் கவனம் சிதறடிக்கப்படுவதால் நீங்கள் நினைத்த காரியத்தினை செய்து முடிக்க தாமத நிலை ஏற்படுவது மட்டுமன்றி தோல்வி நிலைகளும் ஏற்படும் என்பது உண்மையே.