சிரிப்பிற்கும் ஜாதி உண்டு உங்களுக்கு தெரியுமா 

மன  உளைச்சலை போக்கும் நகைச்சுவை உணர்விற்கும் ஆண் , பெண் என்ற பேதம் உள்ளது. 

உங்களின் வாழ்க்கையை இனிமையாக மாற்றிக்கொள்ள நகைச்சுவை உணர்வு அனைவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டியது அவசியம். இன்றைய காலத்தில் அனைவருக்கும் மன உளைச்சல்,மன அழுத்தம், துன்பம், வேலைப்பழு என்பன அதிகமாகவே காணப்படுகின்றது.இவற்றில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள நகைச்சுவை எனும் மருந்து நமக்கு இருக்க வேண்டியது கட்டாயமானது.

விலங்குகளிடம் இருந்து நம்மை பிரித்து காட்டுவது இந்த சிரிப்பு என்ற பண்பு மட்டுமே மனிதனின் மற்ற உணர்வுகளைக் காட்டிலும் அன்பினை வெளிப்படுத்தும் தன்மை அதிகமாக இருப்பது நகைச்சுவை உணர்வில் மட்டுமே. ஒருவரது நகைச்சுவை உணர்வே அவரது உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் பேருதவி புரிகிறது.


இன்றைய அவசர காலத்தில் நாம் அனைவரும் சிரிப்பதற்கு கூட நேரமின்றி அலைந்து திரிகின்றோம்.இவ்வகை சூழ்நிலையில் நகைச்சுவை உணர்வில் கூட ஆன் பெண் பேதம் இடுப்பதை நீங்கள் அறிவீர்களா? 


நகைச்சுவை என்பது பற்றி ஒரு தெளிவு அவசியம் . அதாவது பிறரை கிண்டலும் கேலியும் செய்து அவரின் மனதை புண்படும்படி நடந்துகொள்வது நகைச்சுவை அல்ல, நமக்கு எதிரானவர்களை கூட நமது நண்பர்களாக கொண்டு சேர்க்கும் திறமையே நல்ல நகைச்சுவை ஆகும் . இன்னும் ஒரு சிலர் தம்மை தாமே குறை பட்டுக்கொள்வதை தான் நகைச்சுவை என்றும் நினைப்பதுண்டு . அதுவும் முற்றிலும் தவறாகும். 

ஆன் பெண் இரு பாலரில் பெண்களுக்கு உணர்ச்சிகளை உடனே வெளிக்காட்டிவிடும் பண்பு அதிகமாக காணப்படுகின்றது. அழுகையோ அல்லது சந்தோஷமோ அதனை உடனுக்குடன் வெளிப்படுத்துவதை பெண்கள் கை தேர்ந்தவர்கள்.பொதுவாக பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க நிறைய யுக்திகளை பயன்படுத்துவர். அவர்கள் தங்களின் அழுகை மூலமும், சத்தமாக கத்துவதன் மூலமும் யாரிடமாவது தன் மன அழுத்தத்தை கூறுவதன் மூலமும் தங்களின் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்கின்றனர்,

 ஆனால் ஆண்கள் தங்களின் குறையை பிறரிடம் கூறி ஆறுதல் தேடிக்கொள்வதில்லை. அவர்கள் அதை சாதாரண கண்ணோட்டத்தில் தான் பார்கிறார்கள். அதனால் பொதுவாக பெண்களை விட ஆண்களே அதிகமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக உள்ளனர். உளவியல் ரீதியாக செய்யப்பட ஆய்வின் படி ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிக நகைச்சுவை உணர்வோடு உள்ளனர். எனினும் பெண்கள் ஆண்களை விட நகைச்சுவைகளை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஆற்றல் கொண்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக பேராசிரியர் ரொபேர்ட் .ஆர். பிறைவின் ஒரு ஆய்வினை நடத்தியுள்ளார். அதாவது பெண்கள் எப்பொழுதுமே தமது நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டுவர ஒரு துணையை அல்லது ஆதாரத்தை தேடுகிறார்கள்.ஆனால் ஆண்கள் தமது நகைச்சுவை உணர்வினை பிறருடன் பகிர தவறுவதில்லை. பெண்களை விட ஆண்களே மற்றவர்களை சிரிக்க வைக்க அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது.

ஆண்களாகட்டும் , அல்லது பெண்களாகட்டும் எதிர்பாலரை தம் பக்கம் கவர்ந்திழுக்க இந்த நகைச்சுவை உணர்வை ஒரு தூண்டல் கருவியாகவே பயன்படுத்தி வருகின்றனர். அறிவாற்றல் மற்றும் வலுவான மரபணுக்களின் அடையாளமாக நகைச்சுவை கருதப்படுகிறது.


பெண்களை பொறுத்த வகையில் தமக்கு ஏற்படும் எதிர்மறையான நிகழ்வுகளை கூட நகைச்சுவையுணர்வுடம் மாற்றிக்கொள்ளும் திறமை உண்டு. எனவே எப்போதும் பெண்கள் நல்ல நகைச்சுவைகளை வரவேற்க மறுப்பதில்லை.மேலும் பெண்கள் பொதுவாக ஆண்கள் இல்லாத போது அவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக உள்ளனர். காலை மற்றும் சமூகவியல் துறைகளை பார்க்கப்போனால் கூட நகைச்சுவையாளர்களில் பலர் ஆண்களாகவே இருக்க இதுதான் மிக முக்கிய காரணமாகும். 

கர்ப்பகாலத்தில் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியது முக்கியம் என ஆய்வு தகவல்கள் கூறுகின்றன 
நமது குடும்பங்களில் நிழலும் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது பெண்களை விட ஆண்களின் அணுகுமுறை மாறுபட்டதாகவே காணப்படும்.நிதானம் மற்றும் பொறுமையாக அந்த பிரச்சினையை கையாள ஒவ்வொரு ஆண்களும் முயற்சித்து வருகின்றதே மறுக்க முடியாது. உதாரணமாக குடும்பங்களில் ஏற்படும் திடீர் செலவுகளுக்கு நாமது பண ஒதுக்கம் மற்றும் சேமிப்பில் உள்ள பணம் போதாமல் போகும் பட்சத்தில் பெண்கள் மனசோர்வு அடைந்து விடுவார்கள். ஆனால்,ஆண்களோ அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதில் மூழ்கி விடுவார்கள்.

ஆண்கள் எப்போதும் ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதையும், அதை எப்படிச் சுமுகமாக தீர்க்கலாம் என்றும் யோசிப்பார்கள். ஆனால் பெண்களோ ஒரு பிரச்சனை என்றால் அதைப் பற்றியே தீவிரமாகச் சிந்தித்துத் தங்களின் உடலையும் வருத்திக் கொள்வார்கள். பொதுவாக ஆண்கள் தங்களைச் சுற்றி உள்ளவர்களை எப்போதும் தங்களின் நகைச்சுவை திறனால் மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இது அனைத்து ஆண்களுக்கும் ஒரு தனித்துவமான அடையாளமாகவே உள்ளது. ஆனால் ஆண்கள் தங்களின் காதல் தோல்வியில் மட்டும் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

 ஆக,பெண்களைப்பொறுத்த வகையில் நகைச்சுவை உணர்வுகளை ததும்பிட கொண்டிருந்தாலும், ஆண்களைப்போல வெளிக்காட்டிக்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.நகைச்சுவை உணர்வை உள்வாங்கும் திறன் பெண்களுக்கு அதிகமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்திடும் ஆற்றல் ஆண்களுக்கே அதிகம் உள்ளது.

Article By TamilFeed Media, Canada
2672 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle