முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்

ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது.

ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;

“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

Article By Mirarip MiraripXY, Australia
4120 Visits

Share this article with your friends.

More Suggestions | Stories