2017 இல் இலங்கையின் பொருளாதாரம் ஒரு பார்வை.

எதிர்பார்த்ததில் வீழ்ச்சியும் எதிர்பாராததில் வளர்ச்சியும்

நிறைவாடைந்த 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் வர்த்தக பொருளாதாரத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் ஒரே பார்வையில்.

கடந்த வரு­டத்தின் மூன்றாம் காலாண்டில் விவ­சாயத் துறை 7.6 வீத பங்­க­ளிப்­பையும் கைத்­தொழில் துறை 27.8 வீத பங்­க­ளிப்­பையும் சேவைகள் துறை 56.3 வீத பங்­க­ளிப்­பையும் உற்­பத்தி பொருட்கள் துறை 8.3 வீத பங்­க­ளிப்­பையும் செலுத்­தி­யுள்­ளன.

  • ஆடை மற்றும் ரப்பர் ஏற்றுமதி அதிகரிப்பு 

இறுதி காலாண்டில் இதன் வளர்ச்சியானது கடந்த காலங்களை விட நூற்றுக்கு 8 சதவீதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிசலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்ததை அடுத்து இந்த வளர்ச்சி கிட்டியுள்ளது மட்டுமன்றி ரப்பர் ஏற்றுமதி வருமானமும் இதனால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறியத்தந்துள்ளது .

  • மீன் உற்பத்தி வளர்ச்சி 

கடந்த வருடத்தில் முதல் காலாண்டில் மாத்திரம் 3 லட்சத்து 35 ஆயிரத்து 750 மெட்ரிக் தொன் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக கடற் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.இது கடந்த வருடத்தை விட 1.2 % சதவீத வளர்ச்சியை காட்டும் அதே வேளை இதன் மூலம் தேசிய மீன் உற்பத்திக்கு 49.5 வீத பங்களிப்பும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  •  தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சி 

கடந்த வருடம் ரஷ்யாவில் இலங்கையின் தேயிலைக்கு ஏற்றுமதி தடை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அதன் உற்பத்தி குறைவடைந்துள்ளதை அறிய முடிகின்றது. அதன் அடிப்படையில் 24.7 மில்லியன் கிலோகிராம் தேயிலைகளே உற்பத்தி ஆகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 1999 ஆம் ஆண்டின் பின்னரான மிகவும் குறிஐந்த அளவினை கொண்ட உற்பத்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  •  அன்னிய செலாவணியின் வீழ்ச்சி 

குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றில் இருந்து பெறக்கூடிய அந்நிய செலாவணி வருமானம் 12.2 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வாங்கி அறியத்தந்துள்ளது.அதேவேளை 2017 ஆம் ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதிக்குள் அன்னிய செலாவணியின் வைப்பு 7.9 % சதவீதத்தால் குறைவடைந்து இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வறுமை நிலை­

கடந்த 2016 ஆம் வரு­டத்தை பொறுத்­த­வரை நாட்டின் வறுமை நிலை­யா­னது 4.1 வீத­மாக பதி­வா­கி­யுள்­ள அதே வேளை , 2017 ஆம் ஆண்டை பொறுத்­த­வரை வறுமை நிலை­யா­னது 4.5 வீத­மாக உயர்வடைந்து காணப்­பட்­டது. அதன்­படி பார்க்­கும்­போது நாட்டின் பொது­வான வறுமை நிலை­யா­னது படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து செல்­வதை காண முடி­கின்­றது. 

கடந்த வரு­டத்தில் இயற்கை அனர்த்­தங்கள் அதிகம் இடம்­பெற்­றன. மழை வெள்ளம் மற்றும் வரட்சி ஆகிய இரண்டு வகை­யான அனர்த்­தங்­களும் கடந்த வரு­டத்தில் இலங்­கைக்கு ஏற்­பட்­டன.

இதனால் பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­ட­துடன் உற்­பத்தியும் பாதிக்­கப்­பட்­டது. உற்­பத்தி பொரு­ளா­தாரம் பாதிக்கப்­பட்­டதால் அதிகம் இறக்­கு­மதி செய்­ய­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

எதிர்வரும் 2 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • வேலையின்மை வீதம்.

கடந்த சில காலங்களாக இலங்கையில் வேலையின்மை வீதத்தில் மாற்றங்கள் ஏதும் ஏற்படாமை அவதானிக்கப்படுகின்றது தொடர்ந்தும் 4.1 % சதவீதமாகவே வேலையின்மை வீதம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

Article By TamilFeed Media, Canada
11640 Visits

Share this article with your friends.

More Suggestions | Business