- இதில் அதிகளவு கல்சியம், பொஸ்பரஸ், புரதம், கபோவைதரட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
- சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயரை ஊறவைத்து அதன் தண்ணீரை அருந்த கொடுக்கலாம்.
- பாசிப்பயறை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பயறை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
- குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயாக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லையும் நீங்கும்.