நல்லெண்ணெய் நலம் தரும்.

நல்லெண்ணெய் வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் குடி‌ப்பது குடலு‌க்கு‌ ந‌ல்லது. அத்துடன்  வாயில்விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். மேலும் ந‌‌ல்லெ‌ண்ணெ‌ய் கு‌ளி‌ர்‌ச்‌சியை‌த் தருவதோடு ‌கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம் உடலு‌க்கு‌ப் பய‌ன்படு‌கிறது.

நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் எ‌ன்ற பொரு‌ள் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க் குறைத்து, இதிலுள்ள லினோலிக் அமிலம், ரத்தத்தில் இரு‌க்க வே‌ண்டிய நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கிறது.

வாயில்விட்டு கொப்பளித்து வந்தால் நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவற்றுடன் உடலுக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கும்.
வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள், பற்களில் உள்ள கறைகள் நீங்கி , பற்கள் வெள்ளையாகவும் , ஆரோக்கியமானதாகவும் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமானதாகவும், பல் கூச்சம் நின்று பல் வலியையும் மறைக்கும்.மேலும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

உடலில் பூசி குளித்து வந்தால் உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும். மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியையும் குணமாக்கும்.மேலும் நல்லெண்ணெய் குளியலின் மூலம், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

தலை வலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் தலையில் பூசி வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம். அத்துடன் பொடுகு தொல்லை தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்,உடல் சூட்டையும் குறைக்கும். 

சிறுநீரக கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக செயல்படும். தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள் மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள் படிப்படியாக குறையும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.

 

Article By TamilFeed Media, Canada
4628 Visits

Share this article with your friends.

More Suggestions | Health