கருவுற்றபின் கட்டாயம் தவிர்க்கவேண்டிய சத்துமிக்க உணவுகள்

சாதாரண நாட்களில் சத்துமிக்கதாக கருதப்படும் உணவுகள் கருவுற்றபின் ஆபத்தானதாக மாறுவதை அறிவீர்களா?

மகப்பேறு என்பது பெண்களுக்கு மட்டுமேயான மகத்தான காலமாகும். இந்த காலகட்டத்தில் தன்னுடன் சேர்த்து இன்னுமொரு உயிரை சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் பெண்கள். இதனால் அவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமானது. நடப்பது, உறங்குவது முதற்கொண்டு தமது அன்றாட வாழ்வியலில் பெரும் மாற்றங்களை பெண்கள் எதிர்கொள்ளும் காலகட்டம் இதுவாகும் . 

கர்ப்பகாலத்தில் பெண்கள் சாதாரண உடல் நிலையை விட இன்னும் கொஞ்சம் வலிமை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றுக்கொள்வதில் அதிக நாட்டம் கொள்ள வேண்டும். அவ்வாறே தாம் உண்ணும் உணவுகள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.

நாம் சாதாரண காலப்பகுதியில் உட்கொள்ளும் உணவுகள் சில பெண்களின் பேறுகாலங்களில் ஆபத்தானதாக மாறிவிடுவதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவ்வகையாக பெண்களின் மகப்பேற்று காலத்தில் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டிய உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்.


1. அன்னாசிப்பழம்.(Pineapple).

சாதாராண நாட்களில் பழச்சாறாகவும், பழத்துண்டுகளாகவும் நாம் உட்கொள்ளும் அன்னாசிப்பழம் மகப்பேற்று காலங்களில் பெண்களால் தவிர்க்கப்படவேண்னிய முக்கிய உணவாக மாறிவிடும். அன்னாசிப்பழத்த்தில் காணப்படும் ப்ரோமைலைன் (bromelain) பெண்களின் கருப்பையை மென்மையாக்குவதுடன் சுருக்கமடையவும் செய்கின்றது. இதனால் கருத்ச்சிதைவு ஏற்பட அதிகபட்ச வாய்ப்புக்கள் உள்ளது.எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் அன்னாசிப்பழம் உட்கொள்ளுவதை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம் ஆகும்.

2. பப்பாளி (Green Papaya).

பொதுவாக பச்சை பப்பாளியானது காய்கறியாகவும், மாமிசம் சமைக்கும்போதும் பயன்படுத்தப்படும்.இது கருவுற்ற பெண்கள் உட்கொள்ள கூடாத உணவாக கருதப்படுகின்றது. பச்சைத்தன்மை கொண்ட பப்பாளி காய்களில் காணப்படும் என்சைமாக்கள் பெண்களின் கருப்பையை சுருக்கமடைய செய்யும் தன்மையை கொண்டது. எனவே கருச்சிதைவை ஏற்படுத்தும் பச்சை பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

3. முளைத்த உருளைக்கிழங்கு.(Sprouted Potato).

கண்டிப்பாக உடலுக்கு தேவையான புரதம் மற்றும் காபோஹைதரேட் போன்ற சத்துக்கள் உருளைக்கிழங்கில் அதிகளவில் கிடைப்பதால் உடல் எடையை அதிகப்படுத்த உருளைக்கிழங்குகளை உட்கொள்ளுமாறு கூறுவார்கள். ஆனால் முளைத்த கிழங்குகள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அறுவடை செய்து நாட்கள் பல கழிந்த பின்னர் கிழங்குகள் முளைவிட தொடங்கும். அவ்வாறே பச்சைத்தன்மையுடையதாக மாறவும் செய்யும். முளைகட்டிய உருளைக்கிழங்க்கில் சலனைன்(Solanine) உருவாகின்றது. இது நச்சுத்தன்மை கொண்டதாகும். இவ்வகை சலனைன்களை பூச்சிக்கொல்லியாக கூட பயன்படுத்தலாம் என அறியப்படுகின்றது. 
பொதுவாக சாதாரண உருளைக்கிழங்குகளை விட முளைத்த உருளைக்கிழங்க்குகளின் சுவை மாறுபட்டதாகவே இருக்கும். எனவே முளைத்த கிழங்கை உட்கொள்வது நச்சுக்கொல்லியை உட்கொள்வதற்கு சமனாகும். எனவே அது கருச்சிதைவை ஏற்படுத்தும்.


4. அரத்திப்பழம் (Wild Apple).

அரத்திப்பழம் அல்லது காட்டு ஆப்பிள் புளிப்பு, துவர்ப்பு தன்மை உடையதாக இருக்கும். எனவே கருவுற்ற பெண்களுக்கு இதனை உட்கொள்ள கொடுப்பார்கள். ஆனால் இந்த ஆரத்திப்பழங்கள் கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்த்துள்ளனர்.இது கருப்பையை சுருக்கமடைய செய்வதுடன் பிறகும் குழந்தைகள் மந்தமானதாகவும், குறைபாடுடையதாகவும் பிறக்க காரணியாக அமைகின்றது.

5. குழிப்பேரி (Peach).

குழிப்பேரி அல்லது பீச் (Peach) சூடான காலநிலைக்கு சுவையான பழமாக உட்கொள்ளப்படுவதாகும். இது கருவுற்ற பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழமாகும். பீச் பழங்களை உட்கொள்வதால் அதிக குருதிப்போக்கு ஏற்பட்டு கருச்சிதைவுற வாய்ப்புக்கள் உள்ளது. அது மட்டுமன்றி பீச் பழத்தின் தோலில் காணப்படும் சிறிய மயிர்கணுக்களானவை தொண்டை எரிச்சல் மற்றும் அரிப்பினை ஏற்படுத்தக்கூடியவை. இதனை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

6. வல்லாரை கீரை (Centella).

நியாபகசக்தியை தரக்கூடியதாக இதுவரை வல்லாரை கீரைகளை உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்வதற்க்காக நாம் பணிக்கப்படுகின்றோம். ஆனாலும் வல்லாரைக்கீரையானது கர்ப்பிணிகளுக்கு உகந்தது அல்ல என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.வல்லாரை கீரைகளை பச்சையாகவும், வேகவைத்தும்,உட்கொண்டுவருகிறோம். ஆனால் வல்லாரை கீரையில் இருக்கும் காஸ்ஸாவா(CASSAVA) எனும் பதார்த்தம் கர்ப்பிணிகளுக்கு உகந்தது அல்ல என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வயிறு குளிர்வடைவதுடன் கருச்சிதைவு, குமட்டல், வீக்கம் போன்ற பிற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

7. எள் விதைகள் (Sesame Seed).

கருக்கலைப்பை உடனடியாக நிகழ்த்தக்கூடிய உணவாக எள் சார்ந்த பொருட்களை கூறுவார்கள். எள்ளெண்ணெய் மற்றும் எள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் கருக்கட்டலின் ஆரம்பகாலத்தில் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியதாகும்.அவ்வாறே எள் விதைகளை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் உடனடியாக கருச்சிதைவு ஏற்படும் எனவும் அறியப்படுகின்றது.

ஆயினும், மகப்பேற்றை அண்மித்த பிரசவ காலத்தின் போது கரும் எள்ளினை உட்க்கொள்ள சொல்வார்கள் அது பிரசவத்தினை எளிமையாக்கும் என கூறப்படுகின்றது.


8. சோ���்றுக்கற்றாழை (Aloe vera).

கற்றாழை பொதுவாக தோல் மற்றும் தலைமயிர் பராமரிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும். ஆயினும் கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக பெண்கள் கற்றாழை சார்ந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கற்றாழை கர்ப்பகாலத்தில் அதிக குருதிப்போக்கனை தூண்டக்கூடியது இதனால் கருச்சிதைவு ஏற்படும்.

9. மாமிச ஈரல் (Animal Liver).

பொதுவாக மாமிச ஈரலில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால் கர்ப்பிணிகளுக்கு இது உகந்தது அல்ல. மாமிசங்களில் உள்ள ஈரலில் விட்டமின் A மற்றும் கொழுப்புத்தன்மை அதிகளவில் காணப்படுகின்றது. அவ்வாறே நச்சுத்தன்மை அனைத்தும் மாமிச ஈரலிலேயே சேர்கின்றது. இதனை கர்ப்பகாலத்தில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறே சாதாரண நபர்களும் அதிகளவில் மாமிச ஈரல் உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.

10. முருங்கை (Drumstick Tree).

முருங்கை இலை, பூ மற்றும் காய் என்பன கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு கொடுக்க கூடாது. முருங்கை உணவுகளில் விட்டமின்கள், இரும்புச்சத்து என்பன காணப்பட்டாலும் முருங்கையில் காணப்படும் அல்பா சிட்ரோசெல்லோ (ALPHA -SITROSELO) பெண்களுக்கு காணப்படும் ஈஸ்ட்ரஜன் சுரப்பினை கடினமடைய செய்வதால் கருச்சிதைவை ஏற்படுத்தும்.

Article By TamilFeed Media, Canada
5140 Visits

Share this article with your friends.

More Suggestions | Health