வசம்பு உடலுக்கு தரும் தெம்பு.

வசம்பு என்று குறிப்பிடுவது அதன் வேர்ப் பகுதியாகும். இது அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.இது குழந்தைகளின் உடல் நலம் காப்பதில் சிறந்து விளங்குவதுடன் ஏனையோருக்கும் உகந்தது.
  • இது இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய்த்துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு மிகவும் சிறந்தது.
  • இதன் தண்டு, இலை, பூ ஆகியவையும் பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களைக் கரைத்திடும் மருந்தாகவும் இதன் வேர் விஷ முறிவாகவும் பயன்படுகின்றது. 
  • இதற்கு பசியைத் தூண்டும்,வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லும் தன்மை,வாயுத்தொல்லைகளை அகற்றும் தன்மையும் உண்டு.
  • வசம்பைத் தீயில் சுட்டுக் கருக்கி, அதனைத் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தைகளுக்குப் புகட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கு, வயிற்றுப் பொருமல் , வலி ஆகியவை குணமாகும்
  • வசம்புத் தூளைத் தேனில் கலந்து சிறியவர் முதல் பெரியயோர் வரை சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகள்,திடீர் வயிற்றுப் போக்குகள் குணமாகும்.
  • கால்நடைகளுக்கு வசம்புத் தூளும் மஞ்சள் தூளும் கலந்து கொடுத்தால் தொற்று நோய்கள் அணுகாது.
  • நீரில் வசம்புத் தாள்களை சிறுசிறு துண்டுகளாக்கி போட்டு அரைமணி நேரம் கழித்து நீக்கிவிட்டு அந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தோல் நோய்கள் அணுகாது.இதன் தாளை அரைத்து வெட்டுக் காயத்தின் மேல் பூசி வர காயம் ஆறும்.
  • நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேளைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • வசம்பை சூடாக்கி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டியதும் கால்களின் அடிப்பாகத்திலும் தொப்புளைச் சுற்றியும் தடவிவர எந்த நோயும் அணுகாது.
Article By TamilFeed Media, Canada
4868 Visits

Share this article with your friends.

More Suggestions | Health