தாமரையின் தண்டு, இலை, பூ, கிழங்கு இவை அனைத்திலுமே மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளன எனவே இவற்றை பல்வேறு முறைகளில் பயன்படுத்தி பல நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம்.
- மூளை வளர்ச்சி
வெண்தாமரைப் பூ குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து குடித்து வர மூளை வளர்ச்சியடையும்.ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை குணமாகும்.
- கண்பார்வை தெளிவு
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.
வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து அதனை நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைத்து நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத போத்தலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.
- உயர் இரத்த அழுத்தம்
வெண்தாமரைப்பூக்களை காயவைத்து பௌடராக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு தடவை சாப்பிட உயர் இரத்த அழுத்தம் சீராகும்.
- கூந்தல் வளர்ச்சி
தாமரைப் பூ, அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
- இருதயநோய் போக்கும்
செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடுத்து ஒரு சட்டியில் இட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து அதனை இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த குடிநீரை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு குடித்து வர இருதய நோய் குணமடையும்.
- இருமல் போக்கும் நீர்
தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.
- உடல் வெப்பம் குறைக்க.
வெண்தாமரை இதழ்களை உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அதை அடுப்பில் வைத்து நன்றாக வற்றும் வரை (1லிற்றர்) காய்ச்சி வடிகட்டி,அதனுடன் சர்க்கரை 1 கிலோ சேர்த்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொள்ளவும். 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் உடல் சூடு தனியும்.