காலிஃப்ளவர் (Cauliflower) தினமும் உட்கொண்டால் உடல் நலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Cauliflower எனப்படும் கோவா பூக்களில் மாச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை அடங்கியுள்ளது.

இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளதுடன் வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ளடங்கிய ஒரு சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதயநோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. 

இதில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல்கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும். எனவே நீரை கொதிக்கவைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தை கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப்போக்கும்.

உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினம் இதை சமையலில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக உடல் பருமனை அதிகரிக்கலாம். வைட்டமின் பி1,2,3,5,6 மற்றும் பி9 வைட்டமின்கள் மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன.

Article By TamilFeed Media, Canada
2863 Visits

Share this article with your friends.

More Suggestions | Health