பச்சை நிற ஆப்பிளின் அற்புத நன்மைகள்!

இது ஒரு சிறந்த அழகு மேம்படுத்தியாகவும், சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சிறந்த மூலப்பொருளாகவும் உள்ளது. 

இதில் தாதுப்பொருட்களான தாமிரம், மாங்கனீசு, இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது. மேலும் எடையை குறைக்க முயலுபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளைசேர்ப்பது நல்லது. மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும். இதனை தினமும் உட்கொள்வதால், அது சருமத்தை ஆழமாக ஈரப்பதமூட்டப்பட்டு மற்றும் சருமத்தின் ஒட்டுமொத்த திசு அமைப்பை மேம்படுத்தி, சுருக்கங்கள் ஏற்படுவதை நீக்க உதவி செய்கிறது.இதிலுள்ள அதிகமான வைட்டமின்கள், சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், சருமத்தின் நிறத்தை வெண்மையாக்கும்.மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.

இதில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. அதனால் தான் தோலுடன் ஆப்பிளை சாப்பிடுங்கள் என்று எப்போதும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். மேலும் குடல்கள் மற்றும் இதர அமைப்புகள் எந்த அளவில் சுத்தமாக இருக்கின்றனவோ, அந்த அளவில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

இதில் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்து இருப்பதால், இது செல்கள் மீண்டும் உற்பத்தியாவதற்கும் மற்றும் செல்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கும் முடிகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுவதோடு, இது சருமத்தை பிரகாசிக்கவும் உதவுகிறது.

இதனை தினமும் உட்கொள்வதால் பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.குறிப்பாக கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.மேலும் பச்சை ஆப்பிள் பழத்தின் சாற்றை உச்சந்தலையில், தொடர்ந்து மசாஜ் செய்தால், பொடுகு நீங்கி முடிகளை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரித்து மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுகின்றது.

பச்சை ஆப்பிள்கள் தைராய்டு சுரப்பியை சரியான செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதால், அது வாத நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதிலிருக்கும் எதிர் ஆக்ஸிகரணிகளால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, அதன் சரியான செயல்பாட்டுக்கும் உறுதி செய்கிறது.ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால், அல்சைமர் என்னும் நினைவாற்றலிழப்பு நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்கலாம்.

 

Article By TamilFeed Media, Canada
4701 Visits

Share this article with your friends.

More Suggestions | Health