வாழைக்காயின் மருத்துவ குணங்கள்

வாழைக்காயின் மருத்துவ குணங்கள்

வாழைக்காய்களில் பல வகைகள் இருந்த போதிலும், நாட்டு வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனாகும், நல்ல வளர்ச்சியையும் அளிக்கும்.
வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும். மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது. 
பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்

Article By TamilFeed Media, Canada
3692 Visits

Share this article with your friends.

More Suggestions | Health